நீச்சல் உடையில் விவகாரமாக போஸ்…டபுள் மீனிங்கில் பேசிய ஆத்மிகா!
சென்னை : தமிழில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு, நரகாசூரன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இவர் நடித்ததில் இதுவரை மீசைய முறுக்கு திரைப்படம் மட்டுமே வெளியாகி இருக்கும் நிலையில் மற்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையில் அதிரடி காட்ட காத்துக் கொண்டிருக்கிறது.
விஜய்ஆண்டனி நடித்து வரும் புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வரும் ஆத்மிகா இப்பொழுது பிகினி உடையில் நீச்சல் குளத்தின் நடுவில் நின்றுகொண்டு டபுள் மீனிங்கில் பேசியுள்ள சர்ச்சைக்குரிய புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

மிகவும் பிரபலமானார்
சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதை அதிக அளவில் கொள்ளை கொண்ட நடிகை ஆத்மிகா இப்பொழுது தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார்.

செமயாக ஸ்கோர்
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆத்மிகா, நடித்த முதல் திரைப்படத்திலேயே செமயாக ஸ்கோர் செய்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

புதிய திரைப்படம்
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு நரகாசூரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த ஆத்மிகா இப்பொழுது விஜய் ஆண்டனியுடன் முதல் முறையாக இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மனதை ஆர்ப்பரித்து
இவ்வாறு ஆத்மிகா நடித்த திரைப்படங்களில் மீசைய முறுக்கு மட்டுமே வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு திரையில் ஹிட்டடிக்க காத்துக் கொண்டிருக்க சமூக வலைதளங்களில் இவர் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஆர்ப்பரித்து வருகிறார்.

டபுள் மீனிங்கில்
இந்நிலையில் இன்று நிவர் புயல் உருவாகி இருக்கும் நிலையில், ஆத்மிகா நீச்சல் குளத்தில் அனைத்தும் அப்பட்டமாகத் தெரிகின்ற நீச்சல் உடையை அணிந்து கொண்டு தண்ணீரின் அலையில் ஆடை பறக்க "என்னது சைக்லோனா!" என டபுள் மீனிங்கில் தலைப்பிட்டவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி பொங்கிய நீச்சல் குள புகைப்படம் இப்பொழுது வைரலாகி வரும் நிலையில், பல ரசிகர்கள் ஆத்மிகாவின் கவர்ச்சி புயலில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











