அதிதி ஷங்கர் என்ட்ரி.. ஆத்மிகா ஆதங்கம்.. கோலிவுட்டிலும் வெடித்த நெபோடிசம் சர்ச்சை!

சென்னை: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு எதிராக நடிகை ஆத்மிகா ட்வீட் போட்டுள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என அனைத்து சினிமா துறையிலும் வாரிசுகளின் ஆளுமை நிறைந்து காணப்படுகிறது.

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நெபோடிசத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டில் நெபோடிசத்திற்கு எதிராக நடிகை ஆத்மிகா ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மீசையை முறுக்கு ஹீரோயின்

மீசையை முறுக்கு ஹீரோயின்

2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அவர் நடித்த இரண்டாம் படம் ஆன நரகாசூரன் மற்றும் அடுத்து அவர் நடித்த கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்கள் பல ஆண்டுகளாக வெளிவராமல் கிடப்பில் கிடக்கின்றன. கடந்த ஆண்டு விஜய் ஆண்டனியுடன் அவர் இணைந்து நடித்த கோடியில் ஒருவன் திரைப்படம் போதுமான வெற்றியை பெற்றது.

அதிதி ஷங்கர் என்ட்ரி

அதிதி ஷங்கர் என்ட்ரி

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கோலிவுட்டில் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரியாக உள்ள நிலையில், நெபோடிசம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நடிகை ஆத்மிகா என அவரது ட்விட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அப்படி என்ன தான் ஆத்மிகா ட்வீட் போட்டுள்ளார் என்பதை பார்ப்போம் வாங்க..

வாரிசுகளுக்கு வாய்ப்பு

வாரிசுகளுக்கு வாய்ப்பு

செல்வாக்கு மிக்கவர்களின் வாரிசுகளுக்கு பெரிய படங்களில் நடிக்கும் ஏணி அசால்ட்டாக கிடைத்து விடுகிறது. மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடம் தான் என்று ட்வீட் போட்டு, விக்ரம் படத்தில் கமல் சொல்வதை போல "பார்த்துக்கலாம்" என ட்வீட்போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை ஆத்மிகா. 5 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும் அவருக்கு கிடைக்காத வாய்ப்புகள் அதிதி ஷங்கருக்கு கிடைத்திருப்பது தான் இந்த ட்வீட்டுக்கான காரணம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கார்த்தி, சிவகார்த்திகேயன்

கார்த்தி, சிவகார்த்திகேயன்

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் முதல் படத்திலேயே நடிகர் கார்த்தி உடன் விருமன் படத்தில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி அறிமுகமாக உள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். தொடர்ந்து டிரெண்டிங்கில் அதிதி ஷங்கர் இருந்து வந்த நிலையில், கடுப்பான ஆத்மிகா இப்படியொரு ட்வீட் போட்டுள்ளார் என்றும் கோலிவுட்டிலும் நெபோடிசம் பிரச்சனை பெரிதாகிறது என்றும் கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

காட்டேரி புரமோஷனா

காட்டேரி புரமோஷனா

இயக்குநர் டிகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா நடிப்பில் உருவான காட்டேரி திரைப்படம் ஒரு வழியாக பல ஆண்டுகள் கழித்து இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்திற்கான கவன ஈர்ப்பு புரமோஷனை செய்திருக்கிறாரா நடிகை ஆத்மிகா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏனென்றால், அதிதி ஷங்கர் விருமன் படத்தில் அறிமுகமாகும் அப்டேட் வரும் போதெல்லாம் அமைதியாகி விட்டு, தனது படம் வரும்போது இப்படியொரு ட்வீட்டை போட்டிருக்கிறாரே என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X