மஞ்சள் நிற உடையில் பளபளக்கும் ஆத்மிகா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
சென்னை : மஞ்சள் நிற உடை அணிந்து பளபளக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஆத்மிகா
தமிழ் திரையுலகில் கடினமான உழைப்புடன் பல வருடங்கள் பல திரைப்படங்கள் நடித்து பிரபலமாகிய காலம் சென்றுவிட்டது. தற்போது சமூக வலைதளங்கள் வந்துவிட்டதால் ஒரு சில படங்கள் நடித்த நடிகைகள் கூட பிரபலமாகி விடுகிறார்கள்.
தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த 'மீசைய முறுக்கு' படத்தின் நடிகை ஆத்மிகாவும் அடங்குவார். ஆத்மிகா தொடர்ந்து 'நரகாசூரன்' படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் தளதளவென இருந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைத்து ஒல்லியாகிவிட்டார்.

அதுமட்டுமின்றி அவரது முக பாவனை மற்றும் நடிப்பும் தற்போது சமந்தாவை போன்றே உள்ளது என பலரும் பேசி வருகின்றனர். இதற்கிடையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இளைஞர்களிடையில் அதிகமாக பிரபலமாகி வருகிறார். கவர்ச்சியை கட்டவிழ்த்து வரும் இவரை ரசிகர்கள் கனவு கன்னியாக பார்க்க துவங்கியுள்ளனர்.
நடிகை ஆத்மிகா நன்றாக தமிழ் பேசத் தெரிந்த தமிழ் பெண். மேலும் சினிமாவில் சிறிய இடத்தை பிடித்தாலே போதும் என்று அடிக்கடி சொல்லுவார். இது அவர் தன்னடக்கத்தை குறிக்கிறது.
நடிகை ஆத்மிகா முறைப்படி சங்கீதம் கற்றவர் ஆவார். இவருக்கு, தமிழ்சினிமாவில் சிறந்த முன்னணி நடிகையாக வேண்டும் என்ற பேராசையெல்லாம் கிடையாது. பக்கத்து வீட்டு பெண் போன்ற வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவரும் இயல்பான நடிகையாகவே இருக்க அவர் ஆசைப்படுகிறார்.
அவருக்கு பாடல் பாடுவது மிகவும் பிடிக்குமாம் அதுதான் அவரின் ஆசையாம். அவரது ஆசையை இசையமைப்பாளர்கள் புரிந்து கொண்டு நிறைவேற்றி வைப்பார்களா? என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன இவர் சமீப காலமாக அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளத்தில் அப்லோட் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற உடை அணிந்து போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களிடையில் பெரிதும் வைரலாகி வருகிறது. இந்த மஞ்ச காட்டு மைனா ரசிகர்களை குறி வைத்து தாக்குகிறது எனவும் நெட்டிசன்கள் பேசுகின்றனர். அடுத்ததாக இவர் நடித்த நரகாசுரன் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இது வரை படத்தரப்பில் இருந்து வரவில்லை.
சினிமாவில் பெரும் அளவில் வெற்றி கிடைக்காத ஹீரோயின்களும், ஹீரோயின்னாக நடிக்க விரும்பும் பலரும் தங்களது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த வேலைகளை பல விஜேக்களும் இந்த ஊரடங்கில் செய்து கொண்டு வருகின்றனர். இந்த யுக்தியை தற்போது ஆத்மிகா பின் பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications