ஆர்யா பார்த்ததும் இதைத்தான் கேட்டார்.. உடல் எடையை எப்படி குறைத்தேன் தெரியுமா?.. அபர்ணதி சீக்ரெட்ஸ்!

சென்னை: பட புரமோஷன்களுக்கு நடிகை அபர்ணதி வருவதில்லை என அவர் மீது நாற்கரப்போர் படத்தின் தயாரிப்பாளர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் போது பட புரமோஷனுக்கு செல்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா காலில் அடிபட்ட நிலையில், சக்கர நாற்காலியில் புரமோஷனுக்கு வருகிறார். இவர் ஏன் வருவதில்லை என ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின.

ஆனால், நெகட்டிவிட்டியை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு தனது உடல் எடையை ஸ்லிம்மாக குறைத்து யங் த்ரிஷா போல மாறியுள்ள அபர்ணதி தனது உடல் எடை குறைத்த ரகசியத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Abarnathi Arya heroine

மேலும், நடிகர் ஆர்யாவை திருமணம் செய்யப் போவதாக நிகழ்ச்சியின் மூலம் காத்திருந்த அபர்ணதிக்கு கடைசியாக அல்வா கிடைத்த நிலையில், சமீபத்தில் ஆர்யாவை சந்திக்கும் போது என்ன சொன்னார் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

57 கிலோ எடை: 80 கிலோ வரை அபர்ணதியின் உடல் எடை அதிகரித்தது. இறுகப்பற்று படத்தில் உடல் எடையை அதிகரித்தும் ஓரளவுக்கு குறைத்தும் நடித்து இருந்தார். ஆனால், தற்போது அதை விட ஸ்லிம்மாக அடுத்த படத்திற்காக வெறும் 57 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதுதொடர்பான ரகசியம் குறித்து கேட்க தெளிவாக பதில் அளித்துள்ளார்.

Abarnathi Arya heroine

இப்படித்தான் குறைத்தேன்: ஆண்களோ, பெண்களோ தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் உணவில் கட்டுப்பாடு அவசியம். மேலும், தகுந்த டிரெய்னரை வைத்துக் கொண்டு ஜிம்மில் பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். வெறுமனே கார்டியோ ஒர்க்கவுட் மட்டும் செய்தால் உடல் எடை குறையாது. தினமும் என்ன சாப்பிட வேண்டும் என டிரெய்னர்கள் சொல்கிறார்களோ அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். தினமும் வித விதமான ஒர்க்கவுட் செய்வேன். ஒரே மாதிரியான உடற்பயிற்சியை செய்தால் போரடித்து விடும் என்பதால் நான் இப்படி பிராக்டீஸ் செய்து உடல் எடையை குறைத்தேன் எனக் கூறியுள்ளார்.

Abarnathi Arya heroine

ஆர்யா என்ன சொன்னார்: சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் வைத்த பார்ட்டியில் தான் ஆர்யாவை சந்தித்தேன். எப்படி இருக்கீங்கன்னு கேட்டார். நான் நல்லா இருக்கேன்னு சொன்னார். இப்போதும் ஒரு நட்பு பாண்டிங்கில் தான் பேசிக் கொள்கிறோம். அவரை காதலித்தது, எல்லாம் அந்த நிகழ்ச்சியில் நடந்த மலரும் நினைவுகள். ஆனால், அதெல்லாம் பர்சனலாக என்னை எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Abarnathi Arya heroine

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X