ஹனிமூன் போன இடத்துல அபிநயா யாரை பார்த்து இருக்காங்க பாருங்க.. அப்பாவும் மகனும் ஒரே வாழ்த்து மழை!
சென்னை: மாற்றுத்திறனாளி நடிகை என்றே தெரியாத அளவுக்கு அசத்தலான நடிப்பை நாடோடிகள் படத்தில் இருந்து பணி படம் வரை பல படங்களில் வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த அபிநயா தன்னை போலவே மாற்றுத்திறனாளியான கார்த்திக் என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். ஹனிமூனுக்காக லண்டனுக்கு சென்ற இடத்தில் டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களை சந்தித்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் தான் அபிநயா முதன்முதலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 2008ம் ஆண்டு நேனின்தே படத்தில் சிறிய ரோலில் நடித்து அசத்தினார். அதன் பின்னர், ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த அபிநயா, 2009 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் இளவரசியாகவும் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் போதிதர்மன் மனைவியாகவும் நடித்து இருந்தார். ஈசன், ஜீனியஸ், வீரம், பூஜை, தாக்க தாக்க, தனி ஒருவன், குற்றம் 23, நிசப்தம், செஞ்சிட்டாளே என் காதல, விழித்திரு, சீதாராமம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
விஷாலுடன் கிசுகிசு: நடிகர் விஷால் உடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் அம்மாவாகவும் மனைவியாகவும் அபிநயா நடித்திருந்தார். விஷாலுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தன்னை பற்றிய வதந்திகள் கிளம்பிய நிலையில், பல வருடங்களாக கார்த்திக் என்கிற சன்னி வர்மாவை காதலித்து வருவதை வெளிப்படையாக போட்டு உடைத்தார் அபிநயா.
அபிநயா திருமணம்: மார்ச் மாதம் இருவருக்கும் உடனடியாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி அபிநயாவுக்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் நடைபெற்றது. அபிநயாவை போலவே கார்த்தியும் பேசவும் கேட்கவும் இயலாதவர் என தகவல்கள் வெளியாக ரசிகர்கள் அவர்களது காதலை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். எங்கள் காதலுக்கு மொழி தேவையில்லை என்று திருமணத்துக்குப் பிறகு அளித்த பேட்டியில் அபிநயா சைகை செய்ய அவரது உதவியாளர் அதனை வெளிப்படையாக கூறினார்.

லண்டனில் ஹனிமூன்: கடைசியாக ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் அபிநயா அவருக்கு மனைவியாக பணி படத்தில் நடித்திருந்தார். தனது மனைவியை இரண்டு கொலைகார இளைஞர்கள் பலாத்காரம் செய்துவிட அவர்களை தேடிப் பிடித்து கட்டித் தொங்கவிட்டு சுட்டுக் கொன்று வெறியை தீர்த்துக்கொள்ளும் கேங்ஸ்டராக ஜோஜு ஜார்ஜ் அந்த படத்தில் நடித்திருந்தார். அதன் 2ம் பாகமும் விரைவில் உருவாகும் என அறிவித்துள்ளார். இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் ஹனிமூனுக்கு லண்டன் சென்றுள்ளார் அபிநயா.
ராம்சரண், சிரஞ்சீவியுடன் சந்திப்பு: லண்டனில் உள்ள ஆக்வா ஷார்ட் ரெசார்ட்டில் அபிநயா தனது கணவருடன் ஹனிமூனை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அந்த இடத்திற்கு சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் வந்த நிலையில், அவர்களை சந்தித்து ஆசி பெற்ற அபிநயா அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி ரசிகர்கள் அபிநயாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











