உசுப்பிவிட்ட சமுத்திரக்கனி.. சைகை மொழியில் பேசி புரோமோஷன்.. நாடோடிகள் அபிநாயாவின் க்யூட் வீடியோ

சென்னை: நடிகர் சமுத்திரக்கனி நடித்து வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள படம் கார்மேனி செல்வம். படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை அபிநயா கலந்து கொண்டு படத்திற்கு புரோமோஷன் செய்தார். அபிநயா வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி என்பதால் கார்மேனி செல்வம் படத்திற்காக சைகை மொழியில் பேசி, புரோமோஷன் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு பெரும் கவனத்தை பெற்றதுடன், தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள உதவியது.

நாடோடிகள் படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ஆம் அறிவு, வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். கதாபாத்திரம் சிறியது பெரியது என்று பாராமல், தன்னுடைய நடிப்பால் ஒவ்வொரு படத்திலும் கவனம் ஈர்த்தவர் அபிநயா.

Abhinaya Promotes Samuthirakani s Film in Sign Language Video Goes Viral Carmeni Selvam

நாடோடிகள் அபிநயா: கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படமான பனி படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், படம் வசூலிலும் வெற்றி பெற்றது. கேட்கவும் பேசவும் முடியாத மாற்றுத்திறனாளியான இவர், இந்த சவால்களை எல்லாம் கடந்துதான் தன்னம்பிக்கையுடன் சினிமாவில் வெற்றி பெற்று வருகிறார். கடந்த ஆண்டு தன்னைப் போலவே மாற்றுத் திறனாளியான தனது பள்ளி பருவ நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகளாக நீண்ட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Abhinaya Promotes Samuthirakani s Film in Sign Language Video Goes Viral Carmeni Selvam

சைகை மொழி: தற்போது, அபிநயா சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியானால் இவரது திரை வாழ்க்கையில் இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்து வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள கார்மேனி செல்வம் படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டு, படத்திற்கு புரோமோஷன் செய்தார். மேடைக்கு அவரை வரச்சொல்லி பெயர் சொல்லும் போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த சமுத்திரக்கனி, உடனே அவரை லேசாக தட்டிவிட்டு மேடை ஏறச் சொன்னார். அதேபோல் இவருக்கு ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடு செய்யப்பட்டதால், அவர் சைகை மொழியில் பேசுவதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவும் ஏதுவாக இருந்தது. இது தொடர்பான அழகான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X