பிளாஸ்ட் அபிராமி.. விருமாண்டியை விஞ்சிய மிரட்டல்.. நடிகைக்கு பறக்கும் ஃபயர்!
சென்னை: விருமாண்டி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அதீத கவனம் ஈர்த்தவர் அபிராமி. அந்தப் படத்துக்கு பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எல்லோராலும் கணிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். பிறகு மீண்டும் நடிக்க வந்து இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை மிரட்டலாக கொண்டு செல்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளாஸ்ட் திரைப்படத்திலும் அவரது நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டுள்ளது.
வானவில் படத்தில் அறிமுகமாகி மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிராமி. நடித்த சில படங்களிலேயே அவருக்கு திறமையான நடிகை என்று பெயர் கிடைக்க; உடனடியாக கமல் படத்தின் கதவுகள் திறந்தன. கமல்ஹாசன் இயக்கிய விருமாண்டி திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். பொதுவாக உலக நாயகன் திரைப்படம் என்றால் அவரை தாண்டி ஸ்கோர் செய்வது கடினம் என்ற பேச்சு இருக்கும். ஆனால் அபிராமியோ அந்த பேச்சையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார்.

கமலால்தான் பெயர்: முக்கியமாக அவரது இயற்பெயர் திவ்யா கோபிகுமார். அம்மணியின் குடும்பமே கமல்ஹாசனின் தீவிர ரசிகர் படை. குணா திரைப்படத்தை பார்த்து அதில் வரும் கதாநாயகியின் பெயரான அபிராமியை தனது மகளுக்கு மாற்றினார்கள். அபிராமியும் கமலின் ரசிகையே. அப்படிப்பட்ட ஒரு ரசிகை விருமாண்டி திரைப்படத்தில் கமல்ஹாசனையே ஓவர்டேக் செய்ததை பார்த்து ஒட்டுமொத்த திரைத்துறையும் ஆச்சரியத்துடன் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செகண்ட் இன்னிங்ஸ்: விருமாண்டி படம் கொடுத்த வெளிச்சம் அவரது கரியருக்கு மைலேஜ் கொடுக்கும் என எல்லோருமே அடித்து சொன்னார்கள். ஆனால் அபிராமியோ திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்த அவர் மாறா படத்தில் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து மகாராஜா உள்ளிட்ட படங்கள், சில வெப் சீரிஸ்களில் எல்லாம் சீரியஸாக நடித்துக்கொண்டிருக்கிறார். இளம் இயக்குநர்களும் அபிராமியை தேடி செல்கிறார்கள்.
பிளாஸ்ட் அபிராமி: அப்படித்தான் சுபாஷ் கே. ராஜ் தன்னுடைய முதல் படமான பிளாஸ்ட்டில் அபிராமியை முக்கியமான ரோலில் நடிக்க வைத்திருக்கிறார். கோலிவுட்டில் அம்மா கேரக்டர் என்றாலே கணவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு; பிள்ளைகளுக்கும் தந்தைக்கும் இடையே தூது சென்றுகொண்டு இருக்கும் நிலைதான் பெரும்பாலும் இருக்கிறது. அதனை இந்தப் படத்தில் இயக்குநர் சுக்கு நூறாக உடைத்திருக்கிறார். அபிராமிக்கு சூப்பரான சண்டை காட்சிகளையும் வைத்து மெர்சலாக்கிவிட்டார்.
பறக்கும் ஃபயர்: அபிராமியும் தனக்கு எப்போதாவதுதான் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதை புரிந்துகொண்டு சண்டை காட்சிகளில் எல்லம் பட்டையை கிளப்பியிருக்கிறார். வீட்டுக்குள் நடக்கும் ஒரு ஃபைட் சீனில் இரண்டு பேரை அபிராமி தாக்குவதும், அவர்கள் தாக்குதலிலிருந்து தப்பிப்பதும் அவ்வளவு அருமையாக இருக்கிறது என அவருக்கு ஃபயரை பறக்கவிடுகிறார்கள் ரசிகர்கள். கண்டிப்பாக இதேபோன்ற ரோல்கள் அடிக்கடி வந்தால் அபிராமி அதை கெட்டியாக பிடித்துக்கொள்வார்; இது அபிராமி 2.0 என பாராட்டு தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications
