Abirami - ஸ்கூல் படிக்கும்போதே அதை செய்துவிட்டேன்.. கமல் பட நாயகி அபிராமி ஓபன் டாக்

சென்னை: Abhirami (அபிராமி) விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் நேரலையில் தோன்றி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

Abhirami has said that he kissed her while studying in school

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க 2001ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அபிராமி. படம் டீசண்டான வரவேற்பையே பெற்றது. அபிராமியின் நடிப்பும் கவனம் ஈர்த்ததன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நல்ல நடிகை: தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். கோலிவுட்டும் அபிராமிக்கு அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அபிராமிக்கு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அன்னலட்சுமி: கமல் ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் அவர். கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதனை விருமாண்டியில் மிகச்சாதாரணமாக செய்தார். மதுரை ஸ்லாங்கை பேசி தைரியமான பெண்மணியாக நடித்து அப்ளாஸை அள்ளினார் அபிராமி.

ஒதுங்கிய அபிராமி: விருமாண்டி படத்துக்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அபிராமி எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. அபிராமி சினிமாவிலிருந்து ஒதுஞ்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.

ரீ என்ட்ரி: ஒருவழியாக பத்து வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தின் ரீ என் ட்ரி கொடுத்தார் அபிராமி. அதிலிருந்து தொடர்ந்து நடித்துவரும் அபிராமி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

இந்நிலையில் அபிராமி தனது சமூக வலைதள பக்கத்தின் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் அபிராமியிடம் நீங்கள் பள்ளி படிக்கும்போது முத்தம் கொடுத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அபிராமி ஆம் நான் பள்ளி படிக்கும்போதே முத்தம் கொடுத்திருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X