Abhirami: 42 வயதிலும் அதிரடி ஃபிட்னஸ்.. கண்ணாடிகளுக்கு நடுவே அதிரடி ஒர்க்அவுட்!
சென்னை: குடும்பப்பாங்கான கதபாத்திரங்கள் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை அபிராமி தான். இவர் தமிழில் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் நடுத்தர வர்க்கத்து இல்லத்தரசியாகவும், 'சமுத்திரம்' படத்தில் பாசமுள்ள தங்கையாக, உலகநாயகன் கமல்ஹாசனுடன் 'விருமாண்டி' படத்தில் அசாத்திய நடிப்பு எனப் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர். அண்மையில் வெளியான விஜய்சேதுபதியின் 'மகாராஜா' படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
வழக்கமாக சற்று பூசினாற்போல குடும்பப்பாங்கான தோற்றத்தில் வலம் வந்த அபிராமி, அண்மையில் வெளியான 'பிளாஸ்ட்' படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
'பிளாஸ்ட்' படத்தில் ஸ்லிம் லுக்: அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 'பிளாஸ்ட்' படத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவரது முந்தைய படங்களை விட மிகவும் ஒல்லியாக, உடல் எடையைக் குறைத்து செம்ம ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் இருந்தார். 40 வயதைக் கடந்த நிலையிலும், இவ்வளவு ஃபிட்டாகத் தனது உடலமைப்பை அவர் எப்படிப் பராமரிக்கிறார்? இந்த அசாத்திய மாற்றத்தின் ரகசியம் என்ன? என ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.

கண்ணாடிகளுக்கு நடுவே வொர்க்அவுட்: ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். நீல நிற ஸ்போர்ட்ஸ் டாப்ஸ் மற்றும் கறுப்பு நிற ட்ராக் பேண்ட் அணிந்து, கைகளில் டம்பல்ஸை ஏந்தியபடி அவர் கச்சிதமாக ஸ்குவாட்ஸ் மற்றும் லஞ்சஸ் பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஜிம்மை சுற்றியுள்ள கண்ணாடிகளுக்கு நடுவே நின்றுகொண்டு அவர் வொர்க்அவுட் செய்யும் போது, பல அடுக்கு லேயர்களாக அவர் தெரிவது போல இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
வைரலாகும் கேப்ஷன்: இந்த வீடியோவின் தொடக்கத்தில் "Mirror Mirror On the wall, Who's the BADDEST Of them all?" என்ற மிரட்டலான வாசகத்தோடு வீடியோவைத் தொடங்கியுள்ளார். சினிமாவில் இத்தனை வருடங்கள் கடந்தும், புதுமுக நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது உடல்நலத்திலும் ஃபிட்னஸிலும் தீவிர அக்கறை காட்டி வரும் அபிராமியின் இந்த ஜிம் வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி மில்லியன் கணக்கான வியூஸ்களைக் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications