என்னோட விருமாண்டி இங்கேதான் இருக்காரு.. அபிராமியை பார்த்து வெட்கப்பட்ட கமல்!
சென்னை: தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா என்ற முதல் பாடலின் வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியிருக்கிறது. இந்த விழாவில் பேசிய அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், சிம்பு, த்ரிஷா என அனைவரும் க்யூட்டான பேச்சுக்களால் ரசிகர்களை கவர்ந்தனர். அதேபோன்று கமலுக்கு பிடித்த அன்னலட்சுமி கதாப்பாத்திரத்தில் அனைத்து தரப்பு மக்களின் இதயத்த கவர்ந்த நடிகையி்ன் பேச்சால் அரங்கமே அதிர்ந்திருக்கிறது. அதற்கு கமல் கொடுத்த ரியாக்ஷனை பார்த்து த்ரிஷாவே மிரண்டு விட்டார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஜூன் 5ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு முன்பு படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. மேலும், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஒரு சில காட்சிகள் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ் சிங்கிளான ஜிங்குச்சா பாடல் இன்று வெளியிடப்பட்டது.

தக் லைஃப் வேறு மாதிரி: இப்பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தங்களது மனதில் பட்டதை நடிகர்கள், நடிகைகள் பேசினர். அப்போது பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "மணிரத்னம் - கமல்ஹாசன் - இளையராஜா இணைந்து நாயகன் படத்தை உருவாக்கினார்கள். இது நாயகன் மாதிரியான படம் இல்லை. வேறு மாதிரியான படமாக இருக்கும் என தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் பேசிய சிம்பு: பின்னர் பேசிய அசோக் செல்வன், என்னுடைய கனவு நிறைவேறியிருக்கிறது. தக் லைஃப் படத்தில் ஜாம்பவான்களுடன் பணியாற்றியதை மறக்க முடியாது. குறிப்பாக சிம்புவுடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது. நான் நடித்த ஓ மை கடவுளே படத்தை பார்த்துவிட்டு எனக்கு கால் பண்ணி ஒரு மணி நேரம் பேசுனாரு. அதை மறக்க முடியாது என அசோக் செல்வன் தெரிவித்தார். மேலும், இதேபோன்று சிம்புவுடன் நடிப்பது மாதிரியான படங்கள் வந்தால் கண்டிப்பாக நடிக்க காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

அழகாய் ஜொலித்த அன்னலட்சுமி: விருமாண்டி படத்தில் அன்னலட்சுமியாக நடித்திருந்த அபிராமியை பார்த்தது ரசிகர்கள் அனைவரும் விருமாண்டி அன்னலட்சுமி என கத்த தொடங்கினர். அப்போது அழகாய் ஜொலித்த அபிராமி, என்னோட விருமாண்டி இங்கேதான் இருக்காரு என தெரிவித்ததும் கமலின் முகம் புன்னகையில் மலர்ந்தது. மேலும், அரங்கமே அதிர ரசிகர்கள் கைதட்டினர். பின்னர் பேசிய அபிராமி, இங்கிலீஸ்ல பேச சொன்னாங்க. தமிழ்நாட்டுக்கு வந்துட்டு தமிழ் ஆடியன்ஸ் முன்னாடி எப்படி ஆங்கிலத்தில் பேச முடியும் என்றார். நிஜமாவே கை நடுங்குது என்ன சொல்றதுன்னு தெரியலை. நான் பார்த்து வளர்ந்த ஜாம்பவான்கள் முன்னாடி நான் நிற்கிறேன். நான் 11 வயதில் நடிக்க வந்தேன். நிஜமாக என் கனவு நிறைவேறியிப்பதை உணர்கிறேன் என அபிராமி தெரிவித்தார்.
அவ்வளவு அழகா: எனக்கு 18 வயது இருக்கும் போது ஏ.ஆர்.ரஹ்மான் சார் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். அவர் பாடல் என்றால் அவ்வளவு பிடிக்கும். அதே போன்று பல நடிகர்கள் அமைந்திருக்கும் மேடையில் நானும் இருக்கிறேன் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும், ரவி கே சார் படம் எடுக்கும் போது அழகா தெரியும். அதுவும் என்னை படம் எடுத்து பார்த்தால் நான் அவ்வழவு அழகாக இருக்கிறேனா என்ற வியப்பு இருந்தது. அவர் ஒரு ஜீனியஸ் என்று கூறினார் அபிராமி. பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில், சிம்புவையும், த்ரிஷாவையும் கார்த்தி ஜெஸி என அழைத்தார். உங்கள் இருவரையும் பார்க்கும் போது VTV படத்தில் பார்ப்பது போன்ற உணர்வு தருகிறது என்றதும் அரங்கம் முழுக்க சிரிப்பலைகள் எழுந்தன. பின்னர், பேசிய அபிராமி, சிம்புவின் நடிப்பை பார்த்து அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன் என அபிராமி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











