இன்ஸ்டா ‘சப்ஸ்கிரைபர்ஸ்’ கிளாமர் காட்டும் அபிராமி.. இணையத்தை சூடேற்றும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

சென்னை: மாடலிங் துறையில் இருந்து வந்து, தற்போது சோஷியல் மீடியா குவீனாக வலம் வரும் நடிகை அபிராமி வெங்கடாசலம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் கவர்ச்சிப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நோட்டா டூ துருவ நட்சத்திரம்: சன் டிவியில் மியூசிக் காம்பியராக (VJ) தனது கரியரைத் தொடங்கிய அபிராமிக்கு, சினிமாவில் நல்ல பிரேக் கொடுத்தது விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா' (NOTA) திரைப்படம் தான். அதில் ஒரு போல்டான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன்பின், தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். மேலும் மாதவனின் 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட், வான் மூன்று, விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் வல்லான் எனப் பல படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

பிக் பாஸ் தந்த பிரபலம்: சினிமா ஒருபுறம் இருந்தாலும், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பிக் பாஸ் வீட்டிற்குள் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும், அதே சமயம் சில விமர்சனங்களும் கிடைத்தன.

Bigg Boss Abhirami Venkatachalam
Photo Credit:

வாய்ப்புகள் இல்லாததால் புது ரூட்: சமீபகாலமாக அபிராமிக்கு சினிமா மற்றும் சீரியல்களில் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் புதிய பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தன் ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், வருமானத்திற்காகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய ரூட்டை கையில் எடுத்துள்ளார் அபிராமி. இன்ஸ்டாகிராமில் சாதாரணப் பதிவுகள் மட்டுமில்லாமல், பணம் செலுத்திப் பார்க்கும் 'இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன்' பக்கத்தை வைத்துள்ளார். இதில் தன் பிரத்யேக சப்ஸ்கிரைபர்களுக்காக பிரம்மாண்டமாக போட்டோஷூட் நடத்தி, படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Bigg Boss Abhirami Venkatachalam
Photo Credit:

ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் : அந்த வகையில், தற்போது அரக்கு நிற பேக்கிரவுண்டில், பச்சை நிறப் பட்டுப்புடவை மற்றும் கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து, ஒற்றை லைட்டிங்கில் கால்களைக் கட்டிக்கொண்டு சோகமாகவும் அதே சமயம் அதீத கவர்ச்சியுடனும் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களைக் கிறங்கடித்து வருகிறது. பட வாய்ப்புகள் குறைந்தாலும், இன்ஸ்டாகிராம் மூலமாக இளசுகளின் இதயங்களை இன்னமும் தன் வசம் வைத்துள்ளார் அபிராமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X