லவ் யூ கமல் சார்.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. தக் லைஃப் மேடையில் கண் கலங்கிய அபிராமி

சென்னை: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழிலும் குறிப்படத்தகுந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவர் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார்.

கேரளாவில் பிறந்தவர் அபிராமி. அவரது இயற்பெயர் திவ்யா. அவரின் குடும்பத்தினரே வெறித்தனமான கமல்ஹாசனின் ரசிகர்கள். குணா படத்தை பார்த்த பிறகு சினிமாவில் அறிமுகமாகும்போது தனது பெயரை அபிராமி என மாற்றிக்கொண்டார் அவர். தமிழில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2001ஆம் அனடு வெளியான வானவில் படத்தின் மூலம் அறிமுகமானார் அபிராமி. படம் டீசன்ட்டான வரவேற்பையே பெற்றது. அபிராமியின் நடிப்பும் கவனம் ஈர்த்ததன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பெயர் வாங்கிய நடிகை: தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். கோலிவுட்டும் அபிராமிக்கு அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அபிராமிக்கு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அன்னலட்சுமி அபிராமி: கமல் ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் அவர். கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதனை விருமாண்டியில் மிகச்சாதாரணமாக செய்தார். மதுரை ஸ்லாங்கை பேசி தைரியமான பெண்மணியாக நடித்து அப்ளாஸை அள்ளினார் அபிராமி. மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

Abhirami s eyes got teary while talking about Kamal on the Thug Life stage

ரீ என்ட்ரி கொடுத்த அபிராமி: சூழல் இப்படி இருக்க மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் மாறா, சுல்தான், மகாராஜா, வேட்டையன், ஜாலியோ ஜிம்கானா, ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ், அகத்தியா, லெவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முதல் இன்னிங்ஸ் போலவே தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிலும் தனது திறமையை மிக அற்புதமாக வெளிப்படுத்திவருகிறார் அவர்.

Take a Poll

தக் லைஃப்: இந்நிலையில் மீண்டும் அவர் கமலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்தில்தான் அவர் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த விருமாண்டி படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பலரையும் கவர்ந்தது. அதேபோல் இந்தப் படத்திலும் அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கும் என்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது.

எமோஷனலான அபிராமி: தக் லைஃப் படத்துடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய அபிராமி, "இந்த நேரத்தில் நான் குட்டி திவ்யா காலத்துக்கு போக வேண்டும். எனது உண்மையான பெயர் திவ்யா. அந்த திவ்யாவிலிருந்து அபிராமியாக மாறினேன். லவ் யூ சார். உங்கள் இரண்டு பேருக்குமே (கமல் , மணிரத்னம்) லவ் யூ. இந்த மாதிரியெல்லாம் நடக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை" என்று கண்கள் கலங்கினார்.

அதனையடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் கமலிடம், 'அபிராமி' என்று அழையுங்கள் என கேட்டுக்கொண்டர். அதற்கு கமலோ, 'குணா படத்தை பார்த்த பிறகுதான் அபிராமி என்று பெயர் மாற்றிக்கொண்டார். இப்போது நீங்கள் சொல்வதை பார்த்தால் அபிராமி என மூன்று முறை காதி சொல்லி; குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் வைக்க சொல்வீர்கள் போல' என ஜாலியாக பேசிவிட்டு அபிராமியை வாஞ்சையோடு கட்டியணைத்துக்கொண்டார்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X