ஐஸ்வர்யா ராய் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் யார் தெரியுமா?.. சர்ச்சைகளுக்கு வந்த முற்றுப்புள்ளி
மும்பை: இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தப் பட்டத்தை பெற்றவர்களாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஸ்பெஷல்தான். உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் என இந்தியர்கள் மனதில் சட்டென்று தோன்றும். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரியவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்று பின்னர் உறுதியானது.
உலக அழகி என்ற பட்டத்தின் மீது பல பெண்களுக்கு ஆசை உண்டு. அந்த ஆசையை இந்தியாவிலிருந்து சென்று நிறைவேற்றியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஐஸ்வர்யா ராய்தான் முதன்மை இடத்தில் இருக்கிறார். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்தப் படம் க்ளாசிக் படமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ஹிந்தியில் பிஸி: தமிழில் அவர் அறிமுகமானாலும் தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்காமல் ஹிந்தி பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கு முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்துவந்த ஐஸ்; அவ்வப்போது தமிழிலும் நடிக்க மறக்கவில்லை. அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். தான் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
திருமணம்: இதற்கிடையே பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்; அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிவந்தன.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: ஆனால் அப்படி வதந்திகள் பரவியதை அடுத்து சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். சூழல் இப்படி இருக்க அண்மையில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் குடும்பத்தோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அதேசமயம் அந்த திருமணத்தில் ஒரு புகைப்படம் பரவியது. அதாவது ஐஸ்வர்யா ராய் தனது முன்னாள் காதலர் சல்மான் கானோடு இருக்கும்படியான புகைப்படம்தான் அது. ஆனால் அது போலியானது என்பது உறுதியானது.
மீண்டும் சர்ச்சை: சூழல் இப்படி இருக்க ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து விவகாரம் கொஞ்ச நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு அபிஷேக் பச்சனோ, அமிதாப் பச்சனோ வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னை உண்மைதானோ என்று ரசிகர்கள் தங்களது சந்தேகத்தை கிளப்பினார்கள்.
ஐஸ்வர்யா ராயின் செயல்: இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை உற்று கவனித்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். அதாவது அவருக்கு 14 மில்லியன்வரை ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். ஆனால் அவர் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் அவரது கணவர் அபிஷேக் பச்சனை மட்டும்தான். இதனை கவனித்த ரசிகர்கள் உண்மையில் அவர்களுக்குள் பிரச்னை என்றால் ஐஸ்வர்யா இந்நேரம் அன்ஃபாலோ செய்திருப்பார். அபிஷேக்கின் புகைப்படங்களையும் நீக்கியிருப்பார். ஆனால் அப்படி செய்யாததால் அவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்றுதானே அர்த்தம் என மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











