நிர்வாணம் சாதாரணம்.. "நிலவின் ஒரு பக்கத்தை" வெளிப்படுத்தி பரபரப்பாக்கிய டாப்லெஸ் நடிகை!
மும்பை: டிவி நடிகை அபிகெய்ல் பாண்டே டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் அபிகெய்ல் பாண்டே. அவர் தற்போது நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுத்துள்ளார். அபிகெய்லுக்கு யோகா செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்.
இதையடுத்து அவர் டூ பீஸில் யோகா செய்யும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அபிகெய்ல்
அபிகெய்ல் டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நான் முன்பு எல்லாம் ஆடையை கழற்ற ரொம்பவே கூச்சப்படுவேன். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதே என் சிந்தனையாக இருந்தது. அதனால் தான் பயந்தேன். அப்பொழுது என் தோழியும், புகைப்படக் கலைஞர் மற்றும் பாதுகாவலரான ஆஷ்கா கொராடியா தான் எனக்கு தைரியம் சொன்னார் என்கிறார் அபிகெய்ல்.

சிந்தனை
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து பயப்படாதே. அப்படி பயந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்று ஆஷ்கா எனக்கு அறிவுரை வழங்கினார். அதன் பிறகு நான் என் பயத்தை கைவிட்டேன். என்னை யாரும் கவனிக்கவில்லை என்பது தெரிந்தது. நிர்வாணமாக இருப்பது சாதாரணம். இது என் கதை, உங்களுடையது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் அபிகெய்ல்.

வியப்பு
இன்ஸ்டாகிராமில் அபிகெய்ல் வெளியிட்டுள்ள டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்பவர்களை விட அவர் கொடுத்துள்ள போஸ் எப்படி சாத்தியமானது என்று வியந்து கேள்வி கேட்டுள்ளவர்களே அதிகம். அபிகெய்ல் நிர்வாணமாக இருப்பது தவறு இல்லை என்று கூறியதுடன் இன்ஸ்டாகிராமில் உள்ள நியூட் யோகா கேர்ளையும் பாராட்டியுள்ளார்.

டான்ஸ் மாஸ்டர்
அபிகெய்ல் டான்ஸ் மாஸ்டரான சனம் ஜோஹாரை காதலித்து வருகிறார். யோகா புகைப்படங்கள் தவிர்த்து தனது காதலருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களையும் அபிகெய்ல் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் யோகா, தியானம் என்று கவனத்தை திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில் அபிகெய்லும் யோகாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











