சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை!
மும்பை: பிரபல இந்தி டிவி சீரியல் நடிகை அபிகைல் பாண்டே ஊஞ்சலாடும் த்ரோபேக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
யோகா செய்வதில் கில்லாடியான அபிகைல் பாண்டே, இந்த லாக்டவுனில் தனது காதலர் சனம் ஜோஹருடன் லிவ்வின்னில் இருக்கிறார்.
இருவரும் இணைந்து செய்யும் கிளுகிளுப்பான யோகா வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களுக்கு செம தீனி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

த்ரோபேக்
இந்த லாக்டவுனில் வெளிநாடுகளுக்கு ஊர் சுற்ற முடியாமல், தவிக்கும் பல பிரபலங்களும், முன்னதாக தாங்கள் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்த புகைப்படங்களையும், தங்களது சிறு வயது புகைப்படங்களையும் பதிவிட்டு மலரும் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

பிகினியில் ஊஞ்சல்
இந்நிலையில், நிர்வாண யோகா கலையில் புகழ்பெற்ற பிரபல டிவி நடிகை அபிகைல் பாண்டே, மாலத்தீவில் 2020 புத்தாண்டை கொண்டாடிய த்ரோபேக் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், பிகினி அணிந்தபடி மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் புகைப்படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

ஹாட் கேர்ள்
கருப்பு வெள்ளை புகைப்படமாக பிகினியில் ஊஞ்சல் ஆடும் தனது அல்ட்ரா கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமின் சூட்டை கிளப்பியுள்ளார் நடிகை அபிகைல் பாண்டே. அவரது ஹாட் போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்குகளுடன் ஹாட் கேர்ள், செம ஹாட், ஸ்டன்னிங் பியூட்டி என கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்ப்ரிங் கேர்ள்
ஹம்ஸே ஹை லைஃப், ஜிந்தகி வின்ஸ், மகா ரக்ஷக் ஆர்யான் உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் அபிகைல் பாண்டே. பின்னர், யோகா மற்றும் நடனத்தால் ஈர்க்கப்பட்ட அவர், டிவி சீரியலுக்கு முழுக்கு போட்டு விட்டு, காதலருடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளையும், யோகா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். உடலை ஸ்ப்ரிங் போல வளைக்கும் இவரது ஆற்றல் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications











