எனது உடலின் அந்த பாகத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்கள்.. ஓபனாக பேசிய அபிராமி
சென்னை: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழிலும் குறிப்படத்தகுந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அர்ஜுன் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அபிராமி. படம் டீசண்டான வரவேற்பையே பெற்றது. அபிராமியின் நடிப்பும் கவனம் ஈர்த்ததன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நல்ல நடிகை: தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். கோலிவுட்டும் அபிராமிக்கு அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அபிராமிக்கு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
அன்னலட்சுமி: கமல் ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் அவர். கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதனை விருமாண்டியில் மிகச்சாதாரணமாக செய்தார். மதுரை ஸ்லாங்கை பேசி தைரியமான பெண்மணியாக நடித்து அப்ளாஸை அள்ளினார் அபிராமி.
ஒதுங்கிய அபிராமி: விருமாண்டி படத்துக்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அபிராமி எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. அபிராமி சினிமாவிலிருந்து ஒதுஞ்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.
ரீ என்ட்ரி: ஒருவழியாக பத்து வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தின் ரீ என்ட்ரி கொடுத்தார் அபிராமி. அதிலிருந்து தொடர்ந்து நடித்துவரும் அபிராமி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் அவர் கமிட்டாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அபிராமி பேட்டி: இந்நிலையில் அபிராமி சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "உடல்ரீதியாக நானும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்திருக்கிறார்கள். அதேபோன்று என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும். அதையும் கிண்டலடித்திருக்கிறார்கள். என்னுடைய தாடையை நான் சிறுவயதில் இருந்தபோது இழுத்து இழுத்து பார்த்திருந்திருபபர்கள். அதுவும் நீளமாக காரணமாக அமைந்திருக்கிலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











