»   »  மறுபடியும் வருகிறார் அபிராமி சின்ன இடைவெளிக்குப் பிறகு அபிராமி மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வருகிறார். இந்த முறை சற்றே மெருகேறியநடிப்போடு.வானவில் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அபிராமி. கேரளத்து தமிழ்ப் பெண்ணான அபிராமிக்கு தமிழ் திரையுலகம்நன்றாகவே வரவேற்பு கொடுத்தது. வந்த வேகத்தில் மளமளவென சில படங்களில் நடித்து முடித்தார்.கிளாமர் காட்டுவதில் ஆரம்பத்தில் அப்படி இப்படியென்று இருந்தவர் பின்னர் லேசு பாசாக காட்ட ஒப்புக் கொண்டதால் சிலபடங்கள் கூடுதலாகவே வந்தது. இருந்தாலும் பிரேக் எதுவும் இல்லாமல் அபிராமியின் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.இந்த நேரத்தில் வந்தது விருமாண்டி வாய்ப்பு. கிட்டத்தட்ட தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு கிடைத்தது போன்று நடிப்பதற்குஅருமையான வாய்ப்பு விருமாண்டியில். அபிராமியும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அன்னலட்சுமி கேரக்டரில்அசத்தியிருந்தார்.விருமாண்டியில் அபிராமியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டபோதிலும் அவரை அதற்குப் பிறகு காணவில்லை. எங்கே போனார்,படங்களில் நடிக்கிறாரா என்று தமிழிலும், மலையாளத்திலும் ஆளாளுக்குத் தேடிப் பார்த்தார்கள். ஆனால் அம்மணி எங்கேஇருகிகறார் என்றே தெரியவில்லை.இந்த நேரத்தில்தான் அபிராமிக்கும், காக்க காக்க பட இயக்குநர் கெளதம் மேனனுக்கும் காதல் என்று செய்தி கசிந்தது. இதைஇருவருமே மறுக்கவில்லை. காக்க காக்க படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா செய்த கேரக்டரை அபிராமிக்குக் கொடுப்பதாககெளதம் உறுதி கூறியிருந்தாராம். ஆனால் அப்படி கொடுக்கதாததால் அவருடன் அபிராமிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இந்தக் கோபத்தில் நடிப்பை விட்டு விட்டு வெளிநாட்டுக்குப் படிக்கப் போய் விட்டார் என்று ஒரு தகவல் கூறியது. இப்படியாகசிறிது காலம் திரையுலகை விட்டு விலகியிருந்த அபிராமி இப்போது மீண்டும் நாடு திரும்பி விட்டார். கூடிய விரைவிலேயேநடிக்கவும் வருகிறாராம்.முன்பை விட தனது நடிப்பு தற்போது நன்கு மெருகேறியிருப்பதாகவும், தனக்கே உரிய கேரக்டர்கள் நிச்சயம் தன்னிடம் வந்துசேரும் என்றும், இடையில் ஏற்பட்ட இடைவெளியால் தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்அபிராமி.சமீபத்தில் திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டு சாமி கும்பிட்டுள்ளார் அபிராமி. சீக்கிரம் முடி வளர்ந்த பின் கோலிவுட்டில்குதிக்கப் போகிறாராம்.அன்னலட்சுமியே வருக, நல்ல நடிப்பைத் தருக!

மறுபடியும் வருகிறார் அபிராமி சின்ன இடைவெளிக்குப் பிறகு அபிராமி மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வருகிறார். இந்த முறை சற்றே மெருகேறியநடிப்போடு.வானவில் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அபிராமி. கேரளத்து தமிழ்ப் பெண்ணான அபிராமிக்கு தமிழ் திரையுலகம்நன்றாகவே வரவேற்பு கொடுத்தது. வந்த வேகத்தில் மளமளவென சில படங்களில் நடித்து முடித்தார்.கிளாமர் காட்டுவதில் ஆரம்பத்தில் அப்படி இப்படியென்று இருந்தவர் பின்னர் லேசு பாசாக காட்ட ஒப்புக் கொண்டதால் சிலபடங்கள் கூடுதலாகவே வந்தது. இருந்தாலும் பிரேக் எதுவும் இல்லாமல் அபிராமியின் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.இந்த நேரத்தில் வந்தது விருமாண்டி வாய்ப்பு. கிட்டத்தட்ட தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு கிடைத்தது போன்று நடிப்பதற்குஅருமையான வாய்ப்பு விருமாண்டியில். அபிராமியும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அன்னலட்சுமி கேரக்டரில்அசத்தியிருந்தார்.விருமாண்டியில் அபிராமியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டபோதிலும் அவரை அதற்குப் பிறகு காணவில்லை. எங்கே போனார்,படங்களில் நடிக்கிறாரா என்று தமிழிலும், மலையாளத்திலும் ஆளாளுக்குத் தேடிப் பார்த்தார்கள். ஆனால் அம்மணி எங்கேஇருகிகறார் என்றே தெரியவில்லை.இந்த நேரத்தில்தான் அபிராமிக்கும், காக்க காக்க பட இயக்குநர் கெளதம் மேனனுக்கும் காதல் என்று செய்தி கசிந்தது. இதைஇருவருமே மறுக்கவில்லை. காக்க காக்க படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா செய்த கேரக்டரை அபிராமிக்குக் கொடுப்பதாககெளதம் உறுதி கூறியிருந்தாராம். ஆனால் அப்படி கொடுக்கதாததால் அவருடன் அபிராமிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இந்தக் கோபத்தில் நடிப்பை விட்டு விட்டு வெளிநாட்டுக்குப் படிக்கப் போய் விட்டார் என்று ஒரு தகவல் கூறியது. இப்படியாகசிறிது காலம் திரையுலகை விட்டு விலகியிருந்த அபிராமி இப்போது மீண்டும் நாடு திரும்பி விட்டார். கூடிய விரைவிலேயேநடிக்கவும் வருகிறாராம்.முன்பை விட தனது நடிப்பு தற்போது நன்கு மெருகேறியிருப்பதாகவும், தனக்கே உரிய கேரக்டர்கள் நிச்சயம் தன்னிடம் வந்துசேரும் என்றும், இடையில் ஏற்பட்ட இடைவெளியால் தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்அபிராமி.சமீபத்தில் திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டு சாமி கும்பிட்டுள்ளார் அபிராமி. சீக்கிரம் முடி வளர்ந்த பின் கோலிவுட்டில்குதிக்கப் போகிறாராம்.அன்னலட்சுமியே வருக, நல்ல நடிப்பைத் தருக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்ன இடைவெளிக்குப் பிறகு அபிராமி மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வருகிறார். இந்த முறை சற்றே மெருகேறியநடிப்போடு.

வானவில் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அபிராமி. கேரளத்து தமிழ்ப் பெண்ணான அபிராமிக்கு தமிழ் திரையுலகம்நன்றாகவே வரவேற்பு கொடுத்தது. வந்த வேகத்தில் மளமளவென சில படங்களில் நடித்து முடித்தார்.

கிளாமர் காட்டுவதில் ஆரம்பத்தில் அப்படி இப்படியென்று இருந்தவர் பின்னர் லேசு பாசாக காட்ட ஒப்புக் கொண்டதால் சிலபடங்கள் கூடுதலாகவே வந்தது. இருந்தாலும் பிரேக் எதுவும் இல்லாமல் அபிராமியின் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.


இந்த நேரத்தில் வந்தது விருமாண்டி வாய்ப்பு. கிட்டத்தட்ட தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு கிடைத்தது போன்று நடிப்பதற்குஅருமையான வாய்ப்பு விருமாண்டியில். அபிராமியும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அன்னலட்சுமி கேரக்டரில்அசத்தியிருந்தார்.

விருமாண்டியில் அபிராமியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டபோதிலும் அவரை அதற்குப் பிறகு காணவில்லை. எங்கே போனார்,படங்களில் நடிக்கிறாரா என்று தமிழிலும், மலையாளத்திலும் ஆளாளுக்குத் தேடிப் பார்த்தார்கள். ஆனால் அம்மணி எங்கேஇருகிகறார் என்றே தெரியவில்லை.

இந்த நேரத்தில்தான் அபிராமிக்கும், காக்க காக்க பட இயக்குநர் கெளதம் மேனனுக்கும் காதல் என்று செய்தி கசிந்தது. இதைஇருவருமே மறுக்கவில்லை. காக்க காக்க படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா செய்த கேரக்டரை அபிராமிக்குக் கொடுப்பதாககெளதம் உறுதி கூறியிருந்தாராம். ஆனால் அப்படி கொடுக்கதாததால் அவருடன் அபிராமிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


இந்தக் கோபத்தில் நடிப்பை விட்டு விட்டு வெளிநாட்டுக்குப் படிக்கப் போய் விட்டார் என்று ஒரு தகவல் கூறியது. இப்படியாகசிறிது காலம் திரையுலகை விட்டு விலகியிருந்த அபிராமி இப்போது மீண்டும் நாடு திரும்பி விட்டார். கூடிய விரைவிலேயேநடிக்கவும் வருகிறாராம்.

முன்பை விட தனது நடிப்பு தற்போது நன்கு மெருகேறியிருப்பதாகவும், தனக்கே உரிய கேரக்டர்கள் நிச்சயம் தன்னிடம் வந்துசேரும் என்றும், இடையில் ஏற்பட்ட இடைவெளியால் தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்அபிராமி.

சமீபத்தில் திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டு சாமி கும்பிட்டுள்ளார் அபிராமி. சீக்கிரம் முடி வளர்ந்த பின் கோலிவுட்டில்குதிக்கப் போகிறாராம்.

அன்னலட்சுமியே வருக, நல்ல நடிப்பைத் தருக!

Read more about: abhirami back in kollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil