எல்லாம் அந்த தைரியம்தான்.. பிரச்னையே அதுதான்.. ஐஸ்வர்யா ராய் பற்றி மனம் திறந்த அபிஷேக் பச்சன்
மும்பை: அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இருவரும் ஒன்றாக வாழ்ந்துவரும் சூழலில்; கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் பிரச்னை அதன் காரணமாக விவாகரத்து பெறப்போகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின. ஆனால் அவற்றை முற்றிலும் மறுத்திருக்கிறார் அபிஷேக். இந்தச் சூழலில் அவர் ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா தமிழ், ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதில் அவர் நந்தினி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். எழுத்தாளர் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் எழுதிய புனைவு கதாபாத்திரம் நிஜமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு அடையாளமாக மாறி; தனது நடிப்பை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அபிஷேக்குடன் திருமணம்: இதற்கிடையே சல்மான் கானுடன் காதல் பிரேக்கப் செய்துவிட்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. இருவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். மகளும் ஐஸ்வர்யா ராய் போலவே கொள்ளை அழகோடு வளர்ந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யவிருப்பதாக வதந்திகள் பரவின.
அதெல்லாம் பொய்: அதாவது அபிஷேக்கின் தாய் ஜெயாவுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் தினமும் சண்டை வருகிறது என்றும்; அதனால் அபிஷேக்கை பிரிய ஐஸ்வர்யா ராய் முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதனை அபிஷேக் பச்சன் திட்டவட்டமாக மறுத்தார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராயை தான் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை எனவும் ஜெயா பச்சனும் விளக்கமளித்திருந்தார். இதன் காரணமாக ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அபிஷேக் பச்சன் பேட்டி: இந்நிலையில் அபிஷேக் பச்சன் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "எங்களது மகள் ஆராத்யாவை ஐஸ்வர்யா ராய் பார்த்துக்கொள்வார் என்ற தைரியத்தில்தான் நான் வெளியில் சென்று படங்களில் நடிக்க முடிகிறது. எனவே நான் ஐஸ்வர்யா ராய்க்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் ரொம்பவே கொடுத்து வைத்தவன். மகளுக்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன்.
ஆண்களின் பிரச்னை: பிள்ளைகளுக்கு தாய்கள் செய்வதை யாராலும் ஈடுகட்ட முடியாது. தந்தையர்களோ அனைத்தையும் அமைதியாக செய்வார்கள். அன்பை வெளிக்காட்ட தெரியாததுதான் ஆண்களின் பெரிய பிரச்னை. நான் எப்போது பிறந்தேனோ அப்போதிருந்து எனது அம்மா நடிப்பதை நிறுத்திவிட்டார். நடிப்பை நிறுத்தி வீட்டில் இருந்துகொண்டு என்னையும் எனது அக்காவையும் அன்போடும், பத்திரமாகவும் பார்த்துக்கொண்டார். அப்பா வீட்டில் இல்லை என்ற நினைப்பையே அவர் எங்களுக்கு வரவிட்டதில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











