ஐஸ்வர்யா ராயிடம் இதுதான் பிடிக்காதாம்.. நாத்தனார் என்ன இப்படி ஓபனாக சொல்லிட்டாங்க?

மும்பை: ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மிக சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு விவாகரத்து நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் பரவின. ஆனால் அதற்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளியை சமீபத்தில் வைத்தார்கள்.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு அவரது கவனம் சென்றது. அங்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். அப்படிப்பட்ட சமயத்தில் சல்மான் கானை காதலித்தார் ஐஸ்வர்யா. இருவரும் ஃபேமஸ் ஜோடிகளாக வலம்வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவார்கள் என்றும் பலரும் கணித்தார்கள்.

aishwarya rai abishek bachchan

நடந்தது வேறு: ஆனால் கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு முழு காரணம் சல்மான் கான் மட்டும்தான் என்று இன்றுவரை கூறப்படுகிறது. சல்மான் கானை பிரிந்த ஐஸ்வர்யா பிறகு விவேக் ஓபராயை காதலித்தார். இவர்களும் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்க இந்தக் காதலும் பாதியில் முடிந்தது. தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த ஐஸ்வர்யா ராய் அதற்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்தார்.

திருமணம்: அதனையடுத்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் திருமணத்துக்கு பிறகு சில காலம் கழித்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

நாத்தனார் பிரச்னை: இதற்கிடையே அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனால் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனின் அக்காவுக்கும் இடையே சண்டை அதன் காரணமாகஅபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் சுத்த பொய் என்பதை இரண்டு பேருமே தங்களது செயல்பாடுகள் மூலம் காண்பித்தார்கள்.

அபிஷேக்கின் அக்கா பேட்டி: இந்நிலையில் அபிஷேக் பச்சனின் அக்கா ஸ்வேதா ஐஸ்வர்யா ராய் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், "ஐஸ்வர்யா ராய் உழைத்து முன்னேறியவர். ரொம்பவே பலமான பெண். அருமையான தாய். அது எனக்கு அவரிடம் பிடித்த விஷயம். ஆனால் பிடிக்காத விஷயங்களும் இருக்கின்றன. அதாவது அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாலோ இல்லை ஃபோன் செய்தாலோ அதற்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்யவேமாட்டார். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் மீண்டும் மெசேஜோ காலோ செய்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X