»   »  மீண்டும் குஜலாம்பாள்

மீண்டும் குஜலாம்பாள்

Subscribe to Oneindia Tamil

சேது நாயகி அபிதா மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

சேதுவில், விக்ரமுக்கு ஏற்ற ஜோடியாக பலரையும் பார்த்த பாலா, கடைசியில் அபிதாவைப் பார்த்து திருப்தி அடைந்து நாயகியாக்கினார். அபிதகுஜலாம்பாள் என்ற கேரக்டரில் அமைதியாக வந்து அசத்தலான நடிப்பைக் கொடுத்துகலக்கலாக செய்திருந்தார் அபிதா.

சேது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், அபிதாவுக்கும் கொஞ்சம் போல கிராக்கி ஏற்பட்டது. சில புதுப் பட வாய்ப்புகள் அவரைத் தேடி ஓடி வந்தன.ஆனால் அந்த நேரம் பார்த்துத்தானா, அபிதா ஒரு பலான மலையாளப் பட நடிகைஎன்ற செய்தி பரவ வேண்டும்.

சேதுவுக்கு முன்பே ஏகப்பட்ட பலான மலையாளப் படங்களில் நடித்தவர் அபிதா என்ற செய்தி கிளம்பி அவரது மார்க்கெட்டை பஸ்பமாக்கிவிட்டது. மேலும், மலையாளத்தில் அவர் படு சூடான நடிப்பைக் கொடுத்திருந்த தேவதாசி டப் செய்யப்பட்டு வெளியாகி அபிதாவைதர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது.

அதன் பின்னர் அபிதாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் படமும் வரவில்லை. இடையில், உணர்ச்சிகள் என்ற படத்தில் நடித்திருந்தார்.இப்போது டிவி சீரியல்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான் அபிதாவைத் தேடி பெரிய திரை வாய்ப்பு வந்துள்ளது. காதலோடு கலந்து விடு என்ற புதிய படத்தில் அபிதா நடிக்கவுள்ளார்.இவருக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடிக்கிறார். அவரது பெயர் ஜீவா. ஏ.ஜி.சேகர் படத்தை இயக்குகிறார்.

சினிமா கைவிட்டதால், சீரியலில் நடிக்கத் தொடங்கினார் அபிதா. தற்போது மறுபடியும் சினிமா கை கொடுக்க முன்வந்துள்ளதால் அதைமறுக்காமல் ஏற்க முடிவு செய்தாராம் அபிதா.

டிவியில் எனக்குத் திருப்திகரமான கேரக்டர்கள் கிடைக்கின்றன. இதுவே எனக்கு போதிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதேசமயம், நல்லகேரக்டர்கள் வந்தால் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் அபிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil