twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..!

    By
    |

    சென்னை: சப்பாக் படத்தை அடுத்து, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய மேலும் ஒரு படமும் உருவாகியுள்ளது.

    ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த லக்‌ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கைக் கதை, சப்பாக் என்ற பெயரில் இந்தியில் சினிமாவாகிறது. ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்டப் பெண்ணாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். அவருடன் விக்ராந்த் மாஸ்சே நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்குகிறார்.

    ACID, Another Movie On Acid Attack Survivor

    தீபிகா படுகோன் மற்றும் மேக்னாவுடன் இணைந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

    இதன் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய தீபிகா, நான் நடித்த படங்களிலிலேயே கடினமாக இருந்த படம் இதுதான் என்று கண்ணீர் விட்டு அழுதார். இந்தப் படம் ஜனவரில் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இதற்கிடையே, ஆசிட் தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து மற்றொரு படமும் உருவாகியுள்ளது. 'ஆசிட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரியங்கா சிங் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார்.

    அவர் கூறும்போது, 'எங்கள் கதையும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதைதான். ஆனால், தீபிகாவின் படத்தில் இருந்து எங்கள் கதை வேறாக இருக்கும். இது உத்தர பிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

    இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்

    தனது உறவினரால் ஆசிட் வீச்சுக்குள்ளான பெண்ணனின் கதை. அவர் யார் என்பதை இப்போதைக்குச் சொல்ல இயலாது. தீபிகாவின் சப்பாக் படத்துக்கு அதிக கவனம் கிடைத்துள்ளது என்பது உண்மைதான்' என்றார்.

    ஆசிட் படத்தின் இணைத் தயாரிப்பாளர் மன்சிங் கூறும்போது, 'நாங்கள் 2017 ஆம் ஆண்டு இதன் ஷூட்டிங்கை தொடங்கினோம். அப்போது இதே கதையில் இன்னொரு படம் உருவாவது தெரியாது' என்றார்.

    பிரியங்கா சிங், இல்லை என்று சொன்னாலும் இது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வாலின் கதைதான் என்று கூறப்படுகிறது. இந்தப் படம், சப்பாக் படத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிறது.

    பாலகோட் தாக்குதலை மையமாக வைத்து, இந்தியில் இரண்டு படங்கள் உருவாகின்றனர். தமிழில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை தலைவி என்ற பெயரிலும், அயர்ன் லேடி என்ற பெயரிலும் உருவாகிறது. குயின் என்ற வெப் சீரிஸும் இருக்கிறது.

    இப்போது இந்தக் கதையிலும் இரண்டு படம் உருவாகிறது. போங்கப்பா, இதே வேலையா போச்சு என்கிறார்கள் ரசிகர்கள்.

    English summary
    While the Deepika Padukone-starrer is eyeing a January 10 release, few know that another movie on a real-life acid attack survivor will hit screens a week prior. The film, titled ACID helmed by debutant director-producer Priyanka Singh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X