தீராத விளையாட்டுப்பிள்ளை நாயகி நீது சந்திராவுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து!

மும்பை : நடிகை மற்றும் தயாரிப்பாளர் என பல மொழிகளில் நடித்தும் சில வெற்றி படங்களை தயாரித்தும் வெற்றிநடை போட்டு வருபவர் நடிகை நீது சந்ரா.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஜூன் 20 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக தனது குடும்பத்தாருடன் கொண்டாடி வரும் இவருக்கு ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்வீட்டியாக

ஸ்வீட்டியாக

பீகாரை பூர்வீகமாக கொண்ட இவர் விஷ்ணு என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனின் நண்பராக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வரும் இவர், இந்தியில் அக்சய் குமார் மற்றும் ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் வெளியான கரம்மசாலா என்ற படத்தில் ஸ்வீட்டியாக திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இவர் அறிமுகமான முதல் படமே தியேட்டரில் வசூலை வாரி குவித்தது. இவ்வாறு நடித்த முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாகி பாக்ஸ் ஆபீசை கலக்கி வந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வந்து குவிந்தன.

இரு மொழிகளில்

இரு மொழிகளில்

இவ்வாறு தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இவர். தமிழில் ஆர் மாதவன் நடிப்பில் வெளியான யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழ், இந்தி என இரு மொழிகளில் வெளியான இந்த படம் பல நாட்கள் திரையில் வெற்றிகரமாக ஓடியது.

கவர்ந்து இருப்பார்

கவர்ந்து இருப்பார்

இவ்வாறு தமிழிலும் இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில் தனது இரண்டாம் படமான தீராத விளையாட்டுப் பிள்ளையில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வந்து நடிப்பில் நம் அனைவரையும் கவர்ந்து இருப்பார்.

தொடர்ந்து கொண்டே

தொடர்ந்து கொண்டே

விஷாலின் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான இந்த படம் இவரின் கெரியரில் மற்றுமொரு வெற்றிப்படமாக அமைந்தது. தீராத விளையாட்டு பிள்ளையின் வெற்றியை தொடர்ந்து ஆதிபகவன், வைகை எக்ஸ்பிரஸ் என தமிழ் சினிமாவில் இவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சொந்தமாக தயாரிப்பு

சொந்தமாக தயாரிப்பு

இவர் நடித்த ஆதிபகவன் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். தொடர்ந்து நடிப்பில் வெற்றி முகத்தை கண்டு வந்த நீது சந்ரா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் தனது சகோதரன் நிதின் சந்ரா இயக்கிய இரண்டு படங்களை தயாரித்து அதிலும் வெற்றி கண்டுள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

தனது சகோதரன் நிதின் சந்ரா இயக்கத்தில் தேஸ்வா, மிதிலா மகான் என்ற இரண்டு படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இதில் மிதிலா மகான் திரைப்படம் தேசிய விருதை வென்றது.

மகிழ்ச்சியுடன்

மகிழ்ச்சியுடன்

இவ்வாறு நடிப்பிலும் தயாரிப்பிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நீது சந்ரா இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மிகவும் மகிழ்ச்சியுடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதியான இன்று தனது 36ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் இவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்து சொல்லி வரும் வேளையில் இவரது அன்பான ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X