சரக்கும் கையுமாக நடிகை வேதிகா வெளியிட்ட ஜாலியான போஸ்!
மும்பை : லாக்டவுன் சமயத்தில் கையில் சரக்குடன் இயற்கையை ரசித்தவாறு பொழுதை கழிக்கும் பிரபல தமிழ் நடிகை வேதிகா.
சமீபத்தில் பெண்களுக்கு ஆதரவு பெண்களே என்ற சேஞ்சுக்காக தனது பளபளக்கும் கால்களை காட்டியவாறு பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பலரும் பொழுதைப் போக்க என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் ஜாலியாக கையில் சரக்குடன் பொழுதைக் கழிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிப்பு வித்தையை
தமிழ் ரசிகர்களால் மிகப் பிரபலமாக அறியப்பட்ட நடிகை வேதிகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு வித்தையை காட்டி ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறார்.

இரு மொழிகளில்
காளை, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளையும் பல்வேறு விருதுகளையும் வென்று வந்த வேதிகா தற்போது தமிழில் வினோதன் மற்றும் தமிழ் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி வரும் ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியும் காமெடியும்
தொடர்ந்து அமைதியான பெண் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படத்தில் கவர்ச்சியும் காமெடியும் கலந்தவாறு நடித்து அசத்தியிருந்தார். தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வேதிகா பரதேசி மற்றும் காவியத்தலைவன் திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் வாங்கியுள்ளார்.

சுதந்திர பறவை போல்
இவ்வாறுதான் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களில் தனது சிறப்பான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் இவர் தற்போது லாக்டவுன் நேரத்தில் மற்றவர்களைப்போல் வீட்டில் அடைந்து கிடக்காமல் சுதந்திர பறவை போல் ஜாலியாக இயற்கையை ரசித்துக் கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.

சரக்கும் கையுமாக
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் குட்டி டிரவுசர் ஒன்றை அணிந்து கொண்டு தனது பளபளப்பான கால்கள் சூரிய ஒளியில் பட்டு மிளிர, கையில் சரக்குடன் அந்திசாயும் போழுதில் மாலைநேர வெய்யிலை ரசித்தவாறு காத்தாட சரக்கும் கையுமாக பொழுதை கழித்து வருகிறார். இந்த வீடியோ தற்பொழுது பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

பீல் செய்து
ரசிகர்கள் பலரும் திரைப்படங்களில் வேதிகாவை குடும்ப பெண்ணாகவும், அமைதியா பெண்ணாகும் பார்த்துவிட்டு தற்பொழுது சரக்கும் கையுமாக கவர்ச்சி உடையில் இருப்பதை பார்த்ததும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என பீல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











