Keerthi Suresh: செல்லப்பிராணியின் தொல்லை தாங்க முடியல போல.. முகத்தை மூடிக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இது மட்டும் இல்லாமல் பாலிவுட்டில் கடந்த ஆண்டு காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரது செல்லப்பிராணி அவரது முகத்தை நக்கிக் கொண்டு விளையாடிக் கொண்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் கமர்ஷியல் மற்றும் ஆர்ட் சினிமா என வகைப் படுத்தப்படும் இரண்டு வகை சினிமாவிற்கும் பக்காவாக பொருந்திப் போக கூடிய வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது குடும்பம் சினிமா பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் இவரும் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரது தாயார் மூத்த நடிகை மேனகா, அதேபோல் இவரது தந்தை தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார். மலையாள சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

Acterss Keerthi Suresh Play With Her Pet Dog Watch Video

ஆனால் இவருக்கு தமிழில் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது ரஜினி முருகன் படம் தான். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தது. இதனால் இவர் தென்னிந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார். தெலுங்கிலும் கலக்கினார். நடிகையர் திலகம் என தமிழில் வெளியான தெலுங்கு படமான மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதினைப் பெற்றவர்.

திருமணம்: இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தனது பள்ளிக் கால காதலரான ஆண்டணியைத் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிகவும் சிறப்பாக கோவாவில் நடைபெற்றது. இந்து முறைப்படி திருமணம், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவரது திருமணத்தில் தென்னிந்திய சினிமா உலகத்தினர் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகத்தினர் வந்திருந்தார்கள். குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தனி விமானத்தில் ஒன்றாக இவரது திருமணத்திற்கு சென்றார்கள்.

Acterss Keerthi Suresh Play With Her Pet Dog Watch Video

படங்கள்: நடிகர் விஜய் திருமணத்திற்கு சென்றது மட்டுமல்லாமல், அவரது தல பொங்கலுக்கும் நேரில் சென்று வாழ்த்தினார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் கமிட் ஆனார் என்று கூறப்படுகிறது. அதேபோல் மேலும் தென்னிந்திய படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து வருகிறது.

செல்லப்பிராணி: இந்நிலையில் இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷின் செல்லப் பிராணி அவரது முகத்தை நக்குகிறது. இதனால் கீர்த்தி சுரேஷ் தனது முகத்தை மூடிக் கொள்கிறார். ஆனாலும் அவரது செல்லப்பிராணி விடாமல் நக்கிக் கொண்டு உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த செல்லப்பிராணி கீர்த்தி சுரேஷின் திருமணத்தின் போது அவர்களுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X