42வது பிறந்த நாளைக் கொண்டாடும் அழகு பதுமை பிரியங்கா சோப்ரா! சொத்து மட்டும் இத்தனை கோடிகளா?
நியூயார்க்: தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, அதன் பின்னர் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல், பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்குப் பின்னர் இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்த ஒரு படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் பாலிவுட்டில் கொடி நாட்டிய பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டிற்கு குடிபெயர்ந்து விட்டார் என்றே கூறவேண்டும். இன்று அவர் தனது 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
பொதுவாக ஒரு நடிகை என்றால் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகையாக நீடிப்பது என்பது மிகவும் சிரமம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இப்படியான விதிகளை தகர்த்தெறிந்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகிகள் மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டு வரும் நிலையில், தனது இருப்பை தொடர்ந்து உயரத்திற்கு கொண்டு சென்ற நடிகையாக பிரியங்கா சோப்ரா உள்ளார்.

ஒரு நடிகை என்றால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்தும் நடிகர் தரப்பில் இருந்தும் எதிர்பார்க்கப்படுவது, கச்சிதமான உடல் அமைப்பு என்பது இங்கு எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. வாட்டசாட்டமான உடல், கச்சிதமான முகத்தோற்றம், சலிப்பை ஏற்படுத்தாத கிளாமர் லேங்குவேஜ் என இவை கட்டாயம் இருக்க வேண்டும், அதன் பின்னர்தான் நடிப்புத்திறமை எல்லாம். ஆண்களை மைய்யப்படுத்தியே படங்கள் எடுத்தும் பழகிய இந்திய சினிமாவில் இவைதான் நடிகைகளிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுபவையாக உள்ளன. இப்படியான விதிமுறைகளைக் தகர்த்தெறிந்து இன்றைக்கு தான் கால் பதித்துள்ள ஹாலிவுட்டிலும் தவிர்க்கமுடியாத கதாநாயகியாக வலம் வருகின்றார் என்றால், பிரியங்கா சோப்ரா உண்மையிலேயே தரமான நடிகைதான்.

ஹாலிவுட் எண்ட்ரி: தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை,அந்தாஸ், ஃபேஷன் மற்றும் பர்ஃபி மற்றும் மேரி கோம் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைக் குவித்தார். ஏபிசி திரில்லர் தொடரான குவாண்டிகோவில் நடித்து ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா. இதில் நடித்ததன் மூலம் அமெரிக்க நெட்வொர்க் நாடகத் தொடரின் முக்கிய கதாபாத்திரமான முதல் தெற்காசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். குவாண்டிகோவைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி , அவர் ஒரு பெரிய ரசிகர் பட்டாளாத்தை ஹாலிவுட்டில் ஏற்படுத்தினார்.

நெட் வொர்த்: பிரியங்கா சோப்ரா 80 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாக உள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 669 கோடி ஆகும். ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் தொடருக்கு, அவர் மில்லியன் கணக்கான டாலர்களில் சம்பளம் பெறுகின்றார். கூடுதலாக, ஒரு பிராண்டுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது விளம்பரப்படுத்த அவள் பெறுவது குறைந்த பட்சம் 5 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து அதற்கும் அதிகமாக பெருகின்றார். இதுதவிர, உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடனான பிராண்ட் ஒப்புதல் ஒப்பந்தங்களின் மூலம் மில்லியன் கணக்கில் சம்பளமாகப் பெறுகிறார். வணிகங்கள் முக்கிய பிராண்டுகளை விளம்பரப்படுத்துவதைத் தவிர, பிரியங்கா சோப்ரா தனது சொந்த ஹேர்கேர் நிறுவனத்தை அனோமலி என்ற பெயரில் 2021 இல் தொடங்கினார். சோப்ரா நியூயார்க் நகரில் சோனா என்ற இந்திய உணவகத்தில் ஒரு பார்ட்னராக உள்ளார்.

முதலீடுகள்: திறமையான நடிகை மட்டும் இல்லாமல் புத்திசாலியான தொழிலதிபர் என்பதால், பிரியங்கா தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில் புத்திசாலித்தனமாக மில்லியன் கணக்கில் முதலீடு செய்துவருகின்றார். டேட்டிங் ஆப்பான பம்பிள், அவதார் நிறுவனமான ஜெனிஸ் மற்றும் பல பெரிய பிராண்டுகளில் குறிப்பிடத்தக்க பங்குகளை அவர் வைத்திருக்கிறார். அவரது வணிக முயற்சிகளில் மேலும் ஒரு பகுதியாக இருப்பது அவரது தயாரிப்பு நிறுவனம், பல படங்களை தனியாகவும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் தயாரித்து வருகின்றது.

வரவிருக்கும் படங்கள்: பிரியங்கா சோப்ரா தற்போது தி ப்ளஃப் படத்தில் ஃபிராங்க் ஈ ஃப்ளவருடன் இணைந்து இந்தப் படத்திற்காகப் பணியாற்றுகிறார். தி ப்ளஃப் தவிர , அவர் ஜான் செனா மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோருடன் இணைது நடிக்கவுள்ளார். கெவின் சல்லிவன் இயக்கி வரும் எண்டிங் திங்ஸ் படத்திலும் அந்தோணி மேக்கிக்கு ஜோடியாக நடிக்கிறார் . அதேபோல் ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தியிருந்தாலும் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார். பாலிவுட்டைப் பொறுத்தவரை, பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் ஜீ லே ஜரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











