நல்ல கதை அமைந்தால் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை பற்றி யோசிப்பேன்: அமலாபால்

சென்னை: திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் திட்டமில்லை, ஆனால், நல்ல கதை அமைந்தால் நடிப்பது குறித்து யோசிக்கலாம் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

மைனா படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலாபால். கேரளாவைச் சேர்ந்த அமலாபாலும், இயக்குநர் விஜயும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் வரும் ஜூன் மாடஹ்ம் 12-ந்தேதி திருமணம் நடக்கிறது. முன்னதாக 7-ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.

அமலாபால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். எனவே, திருமணத்திற்குப் பின் அமலாபால் நடிப்பைத் தொடருவாரா அல்லது சினிமாவை விட்டு விலகுவாரா? என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் திருமண அழைப்பிதழ் வைக்கத் தொடங்கியுள்ள அமலாபால், இந்த சந்தேகத்திற்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

குடும்பம் தான் முக்கியம்...

குடும்பம் தான் முக்கியம்...

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கும் திட்டம் இல்லை. திருமணமானதும் குடும்பத்துக்குதான் நான் முக்கியத்துவம் அளிப்பேன்.

யோசிக்கலாம்...

யோசிக்கலாம்...

நடிப்பு என் ரத்தத்தில் கலந்துள்ளது. எனவே, திருமணத்துக்கு பின் ஏதேனும் பிரமாதமான கதை அமைந்தால் நடிப்பது குறித்து அப்போது யோசிக்கலாம்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

தற்போது திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளேன். எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள நான் எடுத்த முடிவில் எந்த குழப்பமும் இல்லை.

முழு மனதோடு எடுத்த முடிவு...

முழு மனதோடு எடுத்த முடிவு...

திருமணத்துக்கு யாரும் என்னை நிர்ப்பந்திக்கவும் இல்லை. முழு மனதோடுதான் இந்த முடிவை எடுத்தேன்.

புது படங்கள் ஒப்பந்தமாகவில்லை...

புது படங்கள் ஒப்பந்தமாகவில்லை...

இப்போது ‘மிலி' என்ற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்கிறேன். வேறு புதுபடங்கள் எதற்கும் ஒப்பந்தம் ஆகவில்லை' என இவ்வாறு அமலாபால் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X