உங்கள் அப்பாவுடன் சரக்கு அடித்துள்ளீர்களா.. ரசிகரின் குசும்பான கேள்வி.. மழுப்பலாக பதிலளித்த ஆதி !
ஹைதராபாத் : ஆறடி உயரத்தாலும் அசராத நடிப்பாலும் தமிழ், தெலுங்கு என பல ரசிகர்களை கொண்டு அனைவரையும் தனது கலக்கலான நடிப்பின் மூலம் கவர்ந்தவர் நடிகர் ஆதி.
தமிழில் மிருகம், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் பெற்றுவரும் இவர் தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குனரின் மகன் ஆவார்.
இரு மொழிகளிலும் பல்வேறு படங்கள் நடித்து வரும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் வேடிக்கையான கேள்வியைக் கேட்க அதற்கு ஆதி மழுப்பும் பதில் அளித்துள்ளார்

திறமை இருந்தால்
இந்திய திரைப்படத் துறையில் சினிமா பின்புலத்துடன் பல நடிகர்களும் நடிகைகளும் தொடர்ந்து அறிமுகமாகி கொண்டேதான் இருக்கின்றனர். எனினும் அவ்வாறு அறிமுகமாகும் திரை பின்புலம் கொண்ட நடிகர்கள் பின்னாளில் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்ற கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றனர்.

தனக்கான இடத்தை
அந்த வகையில் தனது திறமையின் மூலம் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுள்ளவர் நடிகர் ஆதி. தமிழில் இவர் மிருகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அது மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆதியின் தந்தை
தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வரும் ஆதியின் தந்தை இயக்குனர் ராஜா ரவி பினிஷெட்டி கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பலராலும் அறியப்பட்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாக்ஸ் ஆபீஸயையும்
மேலும் தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை தெலுங்கு மொழியில் பல உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபீஸயையும் பலமுறை நிரப்பியிருக்கிறார்.

தெலுங்கில் ரீமேக்
தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த சின்னத்தம்பி, லவ்லி, அண்ணாமலை, நாட்டாமை உட்பட பல வெற்றி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கி மிகப்பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது பிறந்த நாள் வந்த நிலையில் அதை தனது குடும்பத்தாருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார்.

சிறுபிள்ளைத்தனமாக
இவ்வாறு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் பல புகைப்படங்கள் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்டு கடைசியில் பிறந்தநாளை மேலும் சிறப்பாக்க கையில் மது பாட்டில்களை எடுத்து வைத்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக சிரித்துக்கொண்டு இருக்க இவரின் மனைவி அதைப்பார்த்து என்னமோ பண்ணித் தொல என்றபடி நெத்தியில் கை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கணவன் மனைவியின்
இவ்வாறு பதிவிட்டுள்ள ஆதியின் அப்பா மற்றும் அம்மா இருக்கும் அந்த அழகான புகைப்படம் பலரையும் கவர்ந்து தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. என்னதான் மிகப் பெரிய இயக்குனராக இருந்தாலும் வீட்டில் மனைவியின் முன் ஒரு சிறுபிள்ளை போல கொஞ்சி விளையாடும் இந்த அழகான கணவன் மனைவியின் அளவு கடந்த காதலைப் பார்த்து அனைவரும் சிரித்தபடி ரசித்தும் மற்றும் இயக்குனர் ராஜா ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மழுப்பும் பதிலளித்துள்ளது
இந்த நிலையில் ஆதி பதிவிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவிற்கு இவரின் ரசிகர் ஒருவர் " நீங்கள் உங்கள் அப்பாவுடன் உட்கார்ந்து எப்போதாவது சரக்கு அடித்து உள்ளீர்களா..? " என அந்த ரசிகர் வேடிக்கையாக கேட்க, அதை பார்த்த ஆதி சிரித்துக்கொண்டே இல்லவே இல்லை என மழுப்பும் விதமாக பதிலளித்துள்ளது அனைவரையும் புன்முறுவல் சிரிப்புடன் சிரிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











