ஆமா.. ஏன் தன்னோட பெயரை ஆரி மாத்துனார்னு தெரியுமா உங்களுக்கு?

By

சென்னை: நடிகர் ஆரி தனது பெயரை திடீரென மாற்றி வைத்துள்ளார்.

தமிழில் ஆடும் கூத்து, ரெட்டச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே படங்களில் நடித்தவர் ஆரி. கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடித்த நெடுஞ்சாலை படம் கவனிக்கப்பட்டது.

அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த மாயா படத்தில் நடித்தார். இந்த படத்தில் நயன்தாராவின் கணவராக அவர் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது.

நாகேஷ் திரையரங்கம்

நாகேஷ் திரையரங்கம்

அடுத்து ஐசக் இயக்கிய நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார். இதில் அவர் ஜோடியாக ஆஸ்னா ஜாவேரி நடித்திருந்தார். த்ரில்லர் படமான இதையடுத்து உன்னோடு கா உட்பட சில படங்களில் நடித்த அவர், இப்போது மேலும் சில படங்களில் நடித்துவருகிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இவர் லண்டனைச் சேர்ந்த இலங்கை தமிழ்ப் பெண்ணான நதியாவை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

ஆரி அர்ஜுனா

ஆரி அர்ஜுனா

இந்நிலையில் நடிகர் ஆரி, தனது பெயரை மாற்றி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் பயணிப்பவன். இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றியுள்ளேன்.

குழப்பம் வேண்டாம்

குழப்பம் வேண்டாம்

ஆரி, ஆரியா, ஆதி என ஒரே உச்சரிப்பில் சில ஹீரோக்களின் பெயர்கள் இருப்பதால், குழப்பம் இருக்க வேண்டாம் என்று இந்த மாற்றத்தை செய்துள்ளேன். இனி இந்த பெயரிலேயே தொடர இருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Read more about: aari ஆரி பெயர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X