பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்.. போட்டோ ஷூட்டில் கலக்கும் அஜித்தின் ரீல் மகள்!
சென்னை : அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன்
விரைவிலேயே கதாநாயகியாக அறிமுகமாக உள்ள இவர் தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்
இப்பொழுது விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வரும் அனிகா சுரேந்திரன் வித்தியாசமான பூ உடையில் எடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

குழந்தை நட்சத்திரம்
தமிழில் நடித்த சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்துள்ளவர் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன் நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மீண்டும் அஜித் மகளாக
என்னை அறிந்தால் திரைப்படத்தின் மகளாக நடித்த பின் பலரும் அனிகாவை அஜித்தின் மகளாக பாவித்து வருகின்றனர் அந்த அளவிற்கு என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா மற்றும் அஜித்தின் காம்பினேஷன் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது இந்த நிலையில் மிருதன்,நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார்

விஸ்வாசம்
தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்று சொல்லித்தெரிய தேவையில்லை திரையரங்குகளில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் விஸ்வாசம் திரைப்படம் தான் டி ஆர் பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு விஸ்வாசம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது என்று சொல்லலாம். அஜித்தின் மகளாக இந்த படத்தில் அனிகா நடித்திருப்பது விஸ்வாசம் படத்திற்கு மற்றுமொரு பலமாக அமைந்தது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்,அனிகா சுரேந்திரன், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தில் தந்தை மகள் பாசம் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

பூ உடையில்
இதையடுத்து ரசிகர்கள் பலரும் அனிகாவை அஜித்தின் மகளாகவே பாவித்து வருகின்றனர் இது வரை குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த அனிகா மிக விரைவிலேயே கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் அந்த வகையில் மலையாளத்தில் ஹிட் அடித்த ஹெலன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் லீட் ரோலில் நடித்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கிறார் இவ்வாறு விரைவிலேயே ஹீரோயினியாக தென்னிந்திய சினிமாவில் பட்டையைக் கிளப்ப இருக்கும் அனிகா இப்பொழுது மிகவும் வித்தியாசமான பூ உடையில் மனதை கொள்ளையடிக்கும் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications











