யாருன்னு தெரியுதா இந்த குழந்தை? நல்லா பாருங்க... தனுஷோட ஹீரோயின்
Recommended Video
Exclusive Interview With Anupama Parameswaran
சென்னை: தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்ட, சிறுவயது புகைபடங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
'பிரேமம்' படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிமிழில், தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் நடிப்புப் பாராட்டப்பட்டது.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் கொஞ்சம் வளர்ந்த பெண்ணாக, தனது தந்தை பரமேஸ்வரனுடன் இருக்கிறார். மற்றவை குழந்தையாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.



Click it and Unblock the Notifications











