அசோக் செல்வனைக் காணோம்! பீச்சில் கோவா சீன் காட்டும் கீர்த்தி பாண்டியன் போட்டோஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் 80களில் இறுதி மற்றும் 90களின் தொடக்கத்தில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அருண்பாண்டியன். இவரது மகள் நடிகை கீர்த்தி பாண்டியன். கீர்த்தி பாண்டியன் ப்ளு ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் கீர்த்தி பாண்டியன் இயல்பிலேயே, நாடகக் கலைஞர் என்பதால் இவருக்கென வெகுஜன மக்கள் மத்தியில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் அசோக் செல்வனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற தகவல் வெளியானபோது அனைவரும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் இருவரும் சினிமாவில் இன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர்களாக இருக்கின்றனர். ஏதோ எண்ணிக்கைக்காக படங்கள் செய்கின்றேன் என இல்லாமல், படத்திற்கு படம் வித்தியாசமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, நடித்து தங்களுக்கென ஒரு நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.

Ashok Selvan Keerthi Pandiyan Keerthi Pandiyan Photos

குறிப்பாக அசோக் செல்வன் ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்தாலும் பரவாயில்லை என மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் தங்களது திருமணத்திற்கு முன்னரே ப்ளு ஸ்டார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்திருந்தனர். இருவருக்குமான ஜோடி பொருத்தம் என்பது திரையில் பார்க்கும்போது சூப்பராக இருப்பதாக படம் ரிலீஸ் ஆன பின்னர் ரசிகர்கள் பலர் தெரிவித்தனர். படம் ரிலீஸ் ஆகும்போது இருவரும் திருமணம் செய்திருந்தனர்.

திருமணம்: இருவரது திருமணமும் காதல் மற்றும் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம். இந்த திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி திருநெல்வேலியில் மிகவும் எளிமையான முறையில் இயற்கை சூழலுக்கு மத்தியில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் ரிலீஸ் ஆனது. பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

விளம்பரம்: திருமணம் முடித்த கையோடு இருவரும் சேர்ந்து ஒரு மேட்ரிமோனி தளத்தின் விளம்பரத்தில் நடித்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கிளம்பியது. அதாவது, “ இவர்கள் மட்டும் காதல் திருமணம் செய்வார்களாம். ஆனால் மேட்ரிமோனி விளம்பரத்திலும் நடிப்பார்களாம்” என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

கிளாமர்: இப்படியான நிலையில், இருவரும் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி பாண்டியன் தான் கடலில் இருக்கும்போது எடுத்த மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற உள்ளாடை அணிந்துள்ள கீர்த்தி பாண்டியன், ஸ்டைலிஸான ஒரு கண்ணாடியும் அணிந்துள்ளார். மேலும் டிரான்ஸ்பிரண்ட் தன்மை கொண்ட மேலாடையையும் அவர் அணிந்திருப்பதால் அம்மனி கொஞ்சம் கிளாமராகவே காணப்படுகின்றார். இந்த போட்டோவைப் பார்த்த பலர் இது அவருடைய ஹனிமூன் போட்டோ என கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X