Summer Special: பப்லுவின் EX கேர்ள் பிரண்ட் ஷீத்தல்.. குளு குளு மஜா போஸ்!
சென்னை: தமிழ் சினிமா மிக பிரபலமான நடிகரான பிரித்திவிராஜ், மலேசியாவைத் சேர்த்த ஷீத்தல் என்ற 23வயது பெண்ணுடன் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், தற்போது ஷீத்தலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஷீத்தல் பதிவிட்டு இருக்கும் போட்டோ டிரெண்டாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது வரை வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறர் பப்லூ. ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சீரியல்களிலும் கவனம் செலுத்தினார். குறிப்பாக கண்ணே கலைமானே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ஷீத்தல்: சீரியல், சினிமா என பிஸியாக நடித்து வந்த பப்லூ, மலேசியாவை சேர்ந்த இளம் பெண் ஷீத்தல் காதலித்து வருவதாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் செய்திகள் பரவின. ஷீத்தலுக்கு 23 என்பதால், பப்லுக்கு இந்த வயதில் இதெல்லாம் தேவையா என பலரும் விமர்சனம் செய்தனர். இதுகுறித்து பேட்டி அளித்த பப்லு. "வயது ஒரு விஷயம் அல்ல, மனசு தான் முக்கியம்" என்று கூறினார். மேலும், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
கோவாவில் ஜாலி: ஆனால் திடீரென ஷீத்தல் தனது சமூக வலைதளங்களில் இருந்து பப்லுவுடன் எடுத்த புகைப்படங்களை நீக்கியது ரசிகர்களுக்கு சந்தேகம் எழுப்பியது. இதுகுறித்து பேட்டி அளித்த ஷீத்தல், இருவரும் பிரிந்து விட்டதாகவும், பப்லு கொடுத்த பரிசுகளை திருப்பி கொடுத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ஷீத்தல் தெரிவித்தார். இதையடுத்து, ஷீத்தல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் திருமண போட்டோவை ஷீத்தல் பகிர்ந்து இருந்தார். தற்போது, ஷீத்தல் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கோவாவில் ஜாலியாக கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "மூவ் ஆன் பண்ணிட்டாங்க", "ஹாப்பி லைஃப் வாழட்டும்" என்று கலவையான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications