Anjali - ரொம்ப நெருக்கமா இருந்தோம்.. ஆனா அஞ்சலி கண்டுக்கல.. பிளாக் பாண்டி ஓபன் டாக்

சென்னை: நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்து தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படம் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுவருகிறது. படம் மட்டுமின்றி அதில் நடித்த அஞ்சலிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

Actor Black Pandi Open Talks about Actress Anjali

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அழகு மட்டுமின்றி திறமையான வெகு சில நடிகைகளில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் அவர்.

காணாமல் போன அஞ்சலி: ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்துர் அசிகர்களை கவர்ந்த அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக திரையுலகிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். நீண்ட் இடைவேளைக்கு பின் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்று நடனம் ஆடி; அதனையடுத்து ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை.

மீண்டும் கவனம்: இந்த சூழலில் மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் தெலுஞ்கிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்தார். தமிழில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். கற்றது தமிழ் எப்படி அஞ்சலிக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததோ அதேபோல் இந்தப் படமும் பெரும் அடையாளமாக மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முக்கியமாக அஞ்சலி பார்த்த ரசிகர்கள் அவரின் ரீ எண்ட்ரி தரமாக இருக்கும் என்பதை இந்த க்ளிம்ப்ஸும், அஞ்சலியின் அழகும் உணர்த்துவதாக தெரிவித்தனர்.

பிளாக் பாண்டி பேட்டி: இந்நிலையில் நடிகர் பிளாக் பாண்டி அஞ்சலி குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "நானும் அஞ்சலியும் அங்காடித் தெரு படத்துக்கு முன்னரிலிருந்தே பழக்கம். ரொம்பவே நெருக்கமான பழக்கம்தான். எப்படி என்றால் நான் அவரை வாடி போடி என்று அழைக்கும் அளவுக்கு பழக்கத்தில் இருந்தோம். நானும் அவரும் நடன அமைப்பாளர் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள்.

அந்த க்ளாஸில் எனக்கு முன் நின்றுதான் அஞ்சலி நடனம் ஆடிக்கொண்டிருப்பார். ஒழுங்காக ஆடு என்று அவரை நான் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். அங்காடித் தெரு படத்துக்கு பிறகு ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தில் நானும் அஞ்சலியும் ஒன்றாக பணியாற்றினோம். பல வருடங்கள் கழித்து அப்போதுதான் அவரை சந்தித்தேன். ஆனால் அந்த சமயத்தில் அவர் என்னிடம் ஒழுங்காக பேசவில்லை.

நானும் அவரிடம் சென்று ஏன் ஒழுங்கா பேசமாட்ற? நான் எதும் தப்பு பண்ணிட்டேனா? உனக்கு எதுவும் பிரச்னையா என்றெல்லாம் கேட்டேன். அதற்கு அவர், அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்று சொன்னார். பிறகு ஒருநாள் மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் ரிப்ளை செய்யவில்லை. சரி இதில் தவறாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை. யாரிடம் பேச வேண்டும் பேசக்கூடாது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவுதானே. இதுவும் கடந்துபோகும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X