Nithya Menon: தனுஷ்தான் முதல்ல போன் செஞ்சு வாழ்த்து சொன்னார்.. நான் நம்பலை.. நித்யா மேனன் ஓபன்!

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மாஸ் காட்டியது.

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நித்யா மேனன். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது போலவே அவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது. 70வது தேசிய விருது கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanush Nithya menon Thiruchitrambalam

நடிகை நித்யா மேனன்: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை நித்யா மேனன். தமிழில் விஜய்யுடன் மெர்சல், ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து இவர் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராகியுள்ளார். நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று கொடுத்ததுடன் நித்யா மேனனுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நித்யா மேனனுக்கு தேசிய விருது: திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். தனுஷுடன் இந்தப் படத்தில் நித்யா மேனன் போட்டிப் போட்டு நடித்திருந்தார். இந்நிலையில் தான் இந்தப்படத்திற்கு தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை என்று நித்யா மேனன் தற்போது தெரிவித்துள்ளார். கமர்ஷியல் படமான திருச்சிற்றம்பலம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியில், தேசிய விருது குறித்து தனக்கு முதலில் தனுஷ் தான் கால் செய்து பாராட்டு தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

Dhanush Nithya menon Thiruchitrambalam

தனுஷின் பெட்டர் சாய்ஸ்: தான் விஷயம் தெரியாமல் எதற்காக பாராட்டு என்று தனுஷிடம் கேட்டதாகவும் தனது பேட்டியில் நித்யா மேனன் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தே விஷயத்தை தனுஷ் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் தன்னுடன் நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அவரது இந்த சாய்ஸ் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பொருந்தியதாகவும் நித்யா மேனன் மேலும் கூறியுள்ளார். இவர்களின் நான்கு கேரக்டர்களை மையமாக வைத்தே படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

நித்யா மேனன் போஸ்ட்: படத்தில் நித்யா மேனனின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது போலவே படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக இந்த படத்தில் பாடலின் கொரியோகிராபிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் யாருக்கு தேசிய விருது கிடைத்திருந்தாலும் அதை நம் நால்வரும் பகிர்ந்துக் கொள்வதே சரியாக இருக்கும் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்யா மேனன் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X