ஐஸ்வர்யா ராயின் மாமியார் இவ்வளவு கோபக்காரியா?.. கம்பை கொண்டு வெளுத்துருக்காங்களே ப்பா!

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார். இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சமூகமாக நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குள் பிரச்னை வெடித்தது என்றும் விவாகரத்து என்றும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை அந்த ஜோடி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஜெயா பச்சன் நடிகர் ஒருவரை கம்பை வைத்து அடித்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

உலக அழகி பட்டம் வென்று இந்தியா முழுவதும் ஃபேமஸ் ஆனவர் ஐஸ்வர்யா ராய். அவருக்கு முதன்முதலில் திரைத்துறை கதவை திறந்தது என்னவோ தமிழ் சினிமாதான். மணிரத்தினம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இருவர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக இன்றுவரை கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது. அந்த படத்துக்கு பிறகு தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அவரது முழு கவனமும் பாலிவுட் பக்கம் திரும்பியது.

பாலிவுட்டில் பிஸி: பாலிவுட்டில் கவனத்தை திருப்பிய ஐஸ்வர்யா ராய் அங்கு படு பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். சல்மான்கான், ஷாருக்கான் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு சல்மான்கான் மீது காதலும் மலர்ந்தது. இருவரும் சில வருடங்கள் காதலித்து பிறகு பிரிந்தார்கள். அந்த பிரிவுக்கு சல்மான் கான்தான் முக்கிய காரணம் என்றும் அந்த ரிலேஷன்ஷிப் டாக்ஸிக்காக இருந்தது என்றும் பின் நாட்களில் ஐஸ்வர்யா ராய் சில பேட்டிகளில் உறுதிப்படுத்தினார்.

Actor Dinesh Lal Yadav Shares Unknown Incident about Aishwarya Rai Mother in Law Jaya Bachchan
Photo Credit:

அபிஷேக்குடன் திருமணம்: சல்மான் கானுடனான காதல் முறிவுக்கு பிறகு விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா பிறகு அந்த காதலையும் பிரேக் அப் செய்து நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். தற்போது அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. இருப்பினும் அவர்களுக்குள் பிரச்னை என்றும் விரைவில் பிரியப்போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள்.

ஜெயா பச்சன்: இதற்கிடையே அபிஷேகத்திற்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் நடந்த பிரச்னைக்கு அமிதாப்பச்சனின் மனைவியான நடிகை ஜெயா பச்சன்தான் காரணம் என்றும்; மாமியார் என்ற அதிகாரத்தை கொண்டு ஐஸ்வர்யா ராயை ரொம்பவே அவர் படுத்துகிறார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை ஜெயா முழுவதுமாக மறுத்துவிட்டார். இந்நிலையில் ஜெயா பச்சன் பற்றி நடிகர் தினேஷ் லால் யாதவ் பேட்டி கொடுத்திருக்கிறார்.

தினேஷ் பேட்டி: அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேசுகையில், "கங்கா தேவி என்ற படத்தில் ஜெயா பச்சன் எனக்கு அம்மாவாக நடித்தார். கதைப்படி எனது மனைவியை நான் அறைய வேண்டும். அதை பார்த்து எனது அம்மா பாத்திரத்தில் நடித்த ஜெயா பச்சன் கம்பால் என்னை அடிக்க வேண்டும். என்னை அடிப்பது மாதிரி நடிக்காமல் உண்மையிலேயே அவர் என்னை அடித்துவிட்டார்.

எப்படி அடிக்கலாம்?: அதுவும் வேகமாக அடித்துவிட்டார். ஜெயாவுக்கு டக்கென்று கோபம் வந்துவிடும். இரண்டு முறை என்னை கம்பால் ஓங்கி அடித்தார். உடனே நான் அவரிடம், ஜெயா ஜி நீங்கள் என்னை உண்மையிலேயே அடிக்கிறீர்கள் என கூறினேன். அதற்கு அவரோ நீ எப்படி எனது மருமகளை அறையலாம் என பதிலுக்கு கேட்டார். அது வெறும் நடிப்பு நீங்கள் உண்மையில் அடித்துவிட்டீர்கள் என கூறினேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X