காதலுனுடன் லிப்லாக்.. போட்டோவை ஷேர் செய்து ஃபீல் பண்ணும் பிரபல நடிகரின் மகள்.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: பிரபல நடிகரின் மகள் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து பீலிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். இவருக்கு ஆயிஷா ஷெராப் என்ற மனைவியும், டைகர் ஷெராப் என்ற மகனும் கிருஷ்ணா ஷெராப் என்ற மகளும் உள்ளனர்.
ஜாக்கி ஷெராப், நடிகராக மட்டுமின்றி இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளராகவும் உள்ளனர். இவரது மகன் டைகர் ஷெராப்பும் பாலிவுட் நடிகர் ஆவார்.

காதலனுடன் மகள்
இந்நிலையில் ஜாக்கி ஷெராப்பின் மகள் கிருஷ்ணா ஷெராப், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பேஸ்கெட் பால் வீரர் எபன் ஹையாம்ஸை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிஸ் பண்ணும் கிருஷ்ணா
இந்நிலையில் கிருஷ்ணா இன்று மீண்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்து இன்டர்நெட்டை மிரட்டி வருகிறார். லாக்டவுன் தொடங்கிய போது மும்பையில் தனது காதலன் எபன் ஹையாம்ஸுடன் சிறிது காலம் வசித்து வந்தார் கிருஷ்ணா, தற்போது அவர் தனது காதலரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார் என்பது அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்தாலே புரிகிறது.

லிப்லாக் போட்டோ
எபன் ஹையாம்ஸ் தற்போது தனது சிட்னியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். தனது காதலனுடன் கிருஷ்ணா மும்பை வீட்டில் தங்கியிருந்த படங்களை ஷேர் செய்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில், கிருஷ்ணாவும் எபனும் ஒருவருக்கொருவர் லிப்லாக் கொடுப்பது இடம்பெற்றுள்ளது.

குளத்தில் கும்மாளம்
மற்றொரு போட்டோவில் அவர்கள் ஒர்க்அவுட் நேரத்தின் போது செய்த ஃபன் வெளிப்பட்டது. அவரது ஆல்பத்தின் இரண்டாவது போட்டோவில் காதல் ஜோடிகள் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டு கும்மாளம் அடித்த காட்சிகள் இடம் பெற்றன.

எமோட்டிக்கான்
இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள கிருஷ்ணா, எந்த கேப்ஷனும் கொடுக்காமல் இன்ஃபினிட்டி எமோட்டிக்கனை மட்டும் வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு மொட்டை மாடியில் பிகினியில் இருந்த போட்டோக்களை ஷேர் செய்து மிரட்டி இருந்தார்.

ட்ரென்ட்டிங்...
அந்த போட்டோவுக்கு அமைதி.. என்று கேப்ஷன் கொடுத்தார். லாக்டவுன் என்ற போதும் தொடர்ந்து பிகினி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியதோடு, ட்ரென்டிங்கிலும் இருந்து வருகிறார் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











