நீண்ட ஆண்டுகளுக்கு பின் திரையில் லட்சுமி மேனன்… என்ன படம்னு தெரியுமா ?

சென்னை : நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

ஏஜிபி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் மனச்சிதைவு நோயாளியாக நடித்துள்ளார்.

முதல் பெண் ஸ்கிசோஃபிரினியா திரைப்படம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன். இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்டா, கொம்பன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகருடன்

முன்னணி நடிகருடன்

தல அஜித்தின் தங்கையாக வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல முன்னணி நடிகரான றெக்கை திரைப்படத்தில் நடித்திருந்தார். கார்த்தி, விஷால், அஜித், விஜய்சேதுபதி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

கடைசியாக

கடைசியாக

முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன், சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. இவர் கடைசியாக முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பொங்கலுக்கு நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

லட்சுமி மேனனின் ஏஜிபி

லட்சுமி மேனனின் ஏஜிபி

லட்சுமி மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏஜிபி திரைப்படத்தில் நடித்துள்ளார். கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏஜிபி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மனச்சோர்வு நோய்

மனச்சோர்வு நோய்

மனச்சோர்வு நோயை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், நடிகை லட்சுமி மேனன் மன சிதை நோய்க்கு ஆனாது போல, மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பது போலவும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணப்படுகிறார். சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்திருக்கும் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா படத்திற்கு சந்திர குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். முதல் பெண் ஸ்கிசோஃபிரினியா திரைப்படம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X