வீணை வாசிக்கும் அழகான கீர்த்தி சுரேஷ்... மரக்கார் போஸ்டர் வெளியிட்டு மோகன்லால் பாராட்டு!
திருவனந்தபுரம் : நடிகர் மோகன் லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார்.
இந்தப் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷின் அழகான போஸ்டரை வெளியிட்டு நாயகன் மோகன்லால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மரக்கார் படம்
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், சுனில் ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் மரக்கார் அரபிக்கடலிண்ட சிம்ஹம். இந்தப் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் ரிலீஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசுக்கான இந்தப் படம் காத்திருந்த சூழலில், ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தியது ஆனால் தற்போது உலகளவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமான படம்
இந்தப் படம் மலையாள திரைப்பட உலகில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான செட்கள் போடப்பட்டு வரலாற்று சூழலை ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக கொடுக்கும்வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான ட்ரெயிலர்
படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மோகன்லால் உள்ளிட்டவர்கள் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அனைத்து தரப்பினரின் மெனக்கெடல்கள் தெரியவருகிறது.

தமிழில் பிரம்மாண்ட ரிலீஸ்
படத்தின் ரிலீஸ் குறித்து மோகன்லால் சில தினங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிலும் பிரம்மாண்டமான அளவில் படம் ரிலீசாக உள்ளது கலைப்புலி எஸ் தாணுவின் வீ கிரியேஷன்ஸ் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
Recommended Video

கீர்த்தி சுரேஷ் போஸ்டர்
இந்நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷின் போஸ்டரை மோகன்லால் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் மலையாள பாரம்பரிய உடையில் கீர்த்தி சுரேஷ் வீணை வாசிக்கம்படியாக காணப்படுகிறார். அழகான சிரிப்பையும் ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அழகாகவும் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











