அதுல்யாவை செல்லக்குட்டி என்று அழைத்த பிரேம்ஜி... கடுப்பான இளம் நடிகர்
சென்னை : நடிகை அதுல்யா ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அவரை செல்லக்குட்டி என்று அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

நடிகை அதுல்யா ரவி
நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் சிறப்பான கேரகடரில் நடித்துள்ளார். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் முருங்கைக்காய் சிப்ஸ் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. சாந்தனுவுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார் அதுல்யா. முதலிரவை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்
ஆயினும் படத்தில் அதுல்யாவின் நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. அடுத்ததாக ஜெய்யுடன் எண்ணித் துணிக மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் என்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா. முருங்கைக்காய் சிப்ஸ் படம் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளது.

புகைப்படங்கள் பகிர்வு
அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படும் அதுல்யா, சமூக வலைதளத்திலும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறார். அவ்வப்போது தனது போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சேலை மற்றும் மாடர்ன் அவுட்பிட்டில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்து வருகிறது.

அதுல்யா பிறந்தநாள்
இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை அதுல்யா கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவருக்கு ஜெய், ஹரீஷ் கல்யாண், சாந்தனு பிரேம்ஜி உளிளட்ட நடிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

செல்லக்குட்டி அதுல்யா
இதனிடையே, நடிகர் பிரேம்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் அதுல்யாவிற்கு செல்லக்குட்டி என்று அழைத்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதற்கு தாங்க்யூ பிரேமு என்று அதுல்யாவும் உருக்கம் தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த ரவுசு தாங்க முடியாமல் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபல நடிகரும் கடுப்பாகியுள்ளார்.
Recommended Video

கடுப்பான இளம்நடிகர்
நடிகர் மகேந்திரன் என்னது செல்லக்குட்டியா என்று தனது செல்லக் கடுப்பை கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். இத்துடன் விடவில்லை பிரேம்ஜி. ஒண்ணு கூடிட்டாங்கய்யா என்று வடிவேலு படத்தின் வீடியோ கிளிப்பிங்சை இணைத்து எஸ்கேப் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











