அடுத்த மாதம் அதிரடி கிளப்ப தயாராகும் எம்புரான்.. மஞ்சு வாரியர் கேரக்டர் நேம் என்ன தெரியுமா?
சென்னை: பிரித்விராஜ் -மோகன்லால் காம்பினேஷனில் வெளியாகி மாஸ் காட்டிய படம் லூசிபர். இந்தப் படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வரும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது எம்புரான் படம். இநத்ப் படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
லூசிபர் படம் கடந்த 2019ம் ஆண்டில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான நிலையில் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்த மஞ்சு வாரியரின் கேரக்டர் பேசப்பட்டது. தன்னுடைய கேரியரில் மனதுக்கு நெருக்கமான கேரக்டர் அது என்று மஞ்சு வாரியர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ரிலீசாகவுள்ள அவரது கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

எம்புரான் படம்: நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து லீட் கேரக்டர்களில் நடித்து மாஸ் கிளப்பி வருகிறார். தற்போது இவர் பான் இந்தியா ஸ்டாராகவும் மாறியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஆடு ஜீவிதம், சலார் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி ஏராளமான ரசிகர்களிடம் சென்றடைந்தது. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்திறமையை காட்டி வரும் பிரித்விராஜ் இயக்கத்தில் அடுத்ததாக எம்புரான் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் அடுத்தமாதம் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லூசிபர் படத்தின் 2ம் பாகம்: கடந்த 2019ம் ஆண்டில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. படத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருடன் பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியாகி மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதிரடி சரவெடியாக வரவேற்பை பெற்றிருந்த லூசிபருக்கு இணையாக இந்தப் படம் ரசிகர்களை கவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடையாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
மஞ்சு வாரியர் கேரக்டர் வீடியோ: ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். இந்தப் படத்தின் அடுத்தடுத்த 36 கேரக்டர்களை ஒரு நாளுக்கு இருவர் வீதம் வெளியிடவுள்ளதாக லைகா முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி முன்னதாக டோவினோ தாமஸின் கேரக்டர் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சு வாரியரின் கேரக்டர் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சு வாரியர் மகிழ்ச்சி: படத்தில் அவரது கேரக்டர் பெயர் பிரியதர்ஷினி ராமதாஸ். படத்தின் முந்தைய பாகத்திலும் அவரது கேரக்டர் பெயர் இதுவாகவே அமைந்திருந்த நிலையில், தற்போது தன்னுடைய கேரக்டர் குறித்து மஞ்சு வாரியர் வீடியோ மூலம் பேசியுள்ளார். பிரியதர்ஷினி குறித்து புதிதாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் லூசிபர் படத்திலேயே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவதாக அவர் இருந்ததாகவும் மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார். லூசிபர் படத்தில் துவங்கிய அவரது பயணம் எம்புரானிலும் தொடர்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கேரியர் பெஸ்ட் என உற்சாகம்: தன்னுடைய கேரியரில் மிகவும் வலிமையான கேரக்டராக பிரியதர்ஷினி இருந்ததாகவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார். இதற்காக பிரித்விராஜ், முரளி கோபி, ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் மோகன்லாலுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தன்னுடைய கேரியர் பெஸ்ட் படங்களை பட்டியலிட்டால் மோகன்லாலுடன் தான் நடித்துள்ள படங்களே அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல பிரித்விராஜ் போன்ற சிறப்பான இயக்குநருடன் பணிபுரிவது மிகவும் சிறப்பானது என்றும் ஒரு கேரக்டருக்கு தேவை, தேவையற்றவை குறித்த சரியான புரிதல் அவருக்கு உள்ளதாகவும் மஞ்சு வாரியர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். லூசிபர் படத்தில் இவரது கேரக்டர் அதிகமான வரவேற்பை பெற்றது போலவே இந்தப் படத்திலும் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











