'ப்ளீஸ், எனக்காக பிரார்த்தியுங்கள்..' மங்காத்தா பட நடிகைக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்!

By

மும்பை: அஜித்தின் மங்காத்தா படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் மிரட்டும் இந்த கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இந்த தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த வைரஸ் தொடர்ந்து அதிகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலமான மும்பையில், இந்தத் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கு அதிகமானவர்களுக்கு இந்த தொற்று பரவியுள்ளது. சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

பங்களாவுக்கு சீல்

பங்களாவுக்கு சீல்

பிரபல நடிகை ரேகா வீட்டு செக்யூரிட்டிக்கு கொரோனா வந்த நிலையில், அவரது பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது பரபரப்பாகி இருந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது.

கொரோனா

கொரோனா

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பின்னர் இரண்டாவதாக நடத்தப்பட்ட பரிசோதனையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், பிரபல நடிகை ராச்சல் ஒயிட்-டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராச்சல் வொயிட்

ராச்சல் வொயிட்

இவர், இம்ரான் ஹாஸ்மி, கங்கனா நடித்த உங்கிலி உட்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். பெங்காலி படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் அஜித்தின் மங்காத்தா படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். மீடு புகார் வெளியான காலகட்டத்தில் பிரபல இந்தி இயக்குனர் சஜித் நதியத்வாலா மீது இவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இதனால் பரபரப்பாக பேசப்பட்டார்.

பயப்பட வேண்டாம்

பயப்பட வேண்டாம்

இவர், தனது ட்விட்டர் கணக்கில், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைய பிரார்த்தியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும், தைரியமாக இருங்கள், பயப்பட வேண்டாம். இதில் இருந்து மீண்டு விடுவீர்கள் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X