ராத்திரியில் ரைசா.. மிட்நைட்டில் கலக்கல்.. வைரலாகும் புகைப்படம்… ரசிகர்கள் ஹேப்பி !

சென்னை : மிட் நைட் போட்டோ ஷூட் என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகை ரைசா.

Recommended Video

Kavin க்கு பதிலடி கொடுத்த Losliya | Bigg Boss Tamil | Kavin Losliya

சினிமாவின் ஆரம்ப காலங்களில் நடிகர் நடிகைகளின் தேர்வு செய்யும் முறை மிகவும் கடுமையாக இருக்கும். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு பாடத் தெரிய வேண்டும், ஆடத் தெரிய வேண்டும் என்று இருந்தன. குறிப்பாக தோற்றமும், குரலும் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில் சினிமாவில் நுழைவு என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

ஆனால், தற்போது தொழில்நுட்பங்கள் வளர வளர திறமையுள்ளவர்களின் திறனை வெளிக்காட்ட பல ஊடகங்கள் வந்தன. எனவே ஆடிஷன்களை தாண்டி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டிக்டாக் போன்றவற்றில் இருந்து நடிகர்களை தேர்வு செய்யும் நிலை உருவாகி உள்ளது. அப்படி பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் இருந்து வந்த நடிகை தான் ரைசா வில்சன்.

மிஸ் சவுத் இந்தியா

மிஸ் சவுத் இந்தியா

ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடித்த ரைசா, பெங்களுரில் கல்லூரிப்படிப்பை முடித்தார் . பின் அங்கே, ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக தனது பணியைத் தொடங்கினார். அவருக்கு மாடலிங் மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங் துறையை தேர்வு செய்தார். மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தைப் பெற்றார்.

 பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சைரா, அதைத்தொடர்ந்து, பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார். அதில், தன் பிக் பாஸ் பங்கேற்பாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார். லிவ் இன் முறையை மையமாக வைத்து எடுத்த இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின் தனுஷ ராசி நேயர்களே படத்தில் நடித்தார். தற்போது அலைஸ்,காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து வருகிறார்.

 ஹாட் பிக்ஸ்

ஹாட் பிக்ஸ்

சில படங்களே நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர், பிரபலமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் இவரின் கவர்ச்சியான போட்டோக்கள் தான். இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர். அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

 மிட் நைட் போட்டோ ஷூட்

மிட் நைட் போட்டோ ஷூட்

லாக்டவுன் நேரத்தில், வீட்டில் இருக்கும் ரைசா, மிட் நைட் போட்டோ ஷீட்என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், வழக்கத்தை விட தன் அழகான இதழ்களில் லிப் ஸ்டிக் அதிகமாக பூசி. முத்துமாலையை கையில் எடுத்துக்கொண்டு விதவிதமான போஸ்களை கொடுத்துள்ளார். நீண்ட நாள் திரையில் பார்க்காமல் ஏங்கும் ரசிகர்களுக்கு நள்ளிரவில் தரிசனம் கொடுத்தார் ரைசா.

 என்ன ரைசா தூக்கம் வரலயா ?

என்ன ரைசா தூக்கம் வரலயா ?

சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கும் நடிகைகள் பல விதமான புகைப்படங்களையும், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் ரைசா நள்ளிரவில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டது அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பல ரசிகர்கள் என்ன ரைசா தூக்கம் வரலயா என்றும், ஓ தூக்கம் வரலனா இது கூட பண்ணலாமா? என்று பலரும் ஜாலியாக கேட்டு வருகின்றனர். இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X