சாரா அர்ஜூனுக்கு அந்த இடத்தில் முத்தம்.. 71வயது நடிகரின் அநாகரீகமான செயல்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: துரந்தர் 2 பட நிகழ்ச்சியில் 71 வயதான நடிகர் ராகேஷ் பேடி, 20 வயதே ஆன சாரா அர்ஜூனின் தோளில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகர் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங்,சாரா அர்ஜூன் நடித்த துரந்தர் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் 1300 கோடியை வசூலித்தது. இதையடுத்து 'Dhurandhar: The Revenge' படம் வெளியாகி வலை அள்ளியது. இந்த படத்தில் சாரா அர்ஜூனின் அப்பாவாக நடிகர் ராகேஷ் பேடி நடித்திருந்தார். இவர் பட விழா ஒன்றில், சாரா அர்ஜுனின் தோளில் முத்தமிட்டதாக வீடியோல வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த ராகேஷ் பேடி இந்த குற்றச்சாட்டு முட்டாள் தனமானது என்றார்.

Sara Arjun Rakesh Bedi Dhurandhar 2 2

சாரா அர்ஜூன்: "சாரா எனது வயதில் பாதி கூட இல்லை, அவர் என் மகள் கதாபாத்திரத்தில் நடித்தார். படப்பிடிப்பின் போது நாங்கள் சந்திக்கும்போதெல்லாம், ஒரு மகள் தந்தையை அணைத்துக்கொள்வது போல அணைத்துகொள்வார். நாங்கள் ஒரு நல்ல புரிதலையும் நட்பையும் பகிர்ந்துகொண்டோம். இது திரையிலும் பிரதிபலித்தது. ஆனால் மக்கள் அதில் இருக்கும் பாசத்தைப் பார்க்கவில்லை. ஒரு வயதான மனிதன் இளம் பெண்ணிடம் அத்துமீறிவிட்டான் என்கிறார்கள். இது பார்ப்பவரின் கண்களில்தான் பிரச்சனை.

அப்பா, மகள் பாசம்: ஒரு மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் நான் ஏன் மோசமான நோக்கத்துடன் அவரை முத்தமிட வேண்டும்? அவரது பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். இத்தகைய விஷயங்களைச் சொல்லும் மக்களின் மனது எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இந்த சமூக வலைதளங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பவே விரும்புகிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கண்டித்த நடிகை: இதை கடுமையாக கண்டித்துள்ள நடிகை கியாரா அத்வானி, கிசுகிசு தவறல்ல. ஆனால் ஒரு வரைமுறை இல்லாமல் கிசுகிசுக்கக் கூடாது. தந்தை மகள் பாசத்தில் இருப்போரை அபாண்டமாக இப்படி சொல்வது தவறு. கட்டிப்பிடித்தல் என்பது அன்பின் வெளிப்பாடு தான். அதில் அற்பத்தனம் வேண்டாமே என்று தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X