”நான் வந்துட்டேன்னு சொல்லு”.. ஒரு வருஷத்துக்கு பிறகு மீண்டும் சமூக வலைதளம் வந்த நடிகை ரம்யா!

பெங்களூரு: கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு பிறகு நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா மீண்டும் சமூக வலைதளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சிம்புவுடன் 'குத்து' படத்திலும், தனுஷுடன் 'பொல்லாதவன்' படத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா.

திவ்யா ஸ்பந்தனா என்றும் ரம்யா என்றும் அழைக்கப்படும் இவர், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார்.

தமிழில்

தமிழில்

கன்னட நடிகையான ரம்யா புனித் ராஜ்குமாரின் அபி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். 2004ம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் நடித்ததன் பிறகு ‘குத்து' ரம்யா என்றே அழைக்கப்பட்டார். பின்னர், அர்ஜுனுடன் இணைந்து கிரி படத்தில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் கன்னட திரையுலகில் பிசியான அவர், தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்திலும் நடித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி

காங்கிரஸ் எம்.பி

2012ம் ஆண்டுக்கு பிறகு தனது அம்மாவை போல காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரஸின் இளைஞரணியில் பணியாற்றிய அவர், 2013ம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் நடைபெற்ற எம்.பி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். அதன் பின்னரும் சில கன்னட படங்களில் நடித்து வந்தார்.

கம்பேக்

கம்பேக்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளத்தை விட்டு விலகிச் சென்ற நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா, கிட்டத்தட்ட ஒரு வருஷத்திற்கு பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் பிரவேசித்துள்ளார். கம்பேக் கொடுத்துள்ள ரம்யா, தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கட்சியில் இருக்கிறார்

கட்சியில் இருக்கிறார்

நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா காங்கிரஸை விட்டு விலகவில்லை என்றும், அவர் இன்னமும் கட்சியில் உறுப்பினராகத்தான் இருக்கிறார். ஆனால், சமூக வலைதளத்தை விட்டு ஏன் விலகினார் என்பது தெரியவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு வரை காங்கிரஸ் ஐடி விங்கையும் இவர் தான் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சினிமா

மீண்டும் சினிமா

ரசிகர்களின் தொடர் கோரிக்கைகள் காரணமாக மீண்டும் சமூக வலைதளத்தில் இணைந்து உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ரம்யா. மேலும், மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட கன்னட படமான தில் கா ராஜா இன்னமும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X