அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி.. அழகு கொஞ்சம் கூட குறையாம.. வைரலாகும் ரம்யா கிருஷ்ணன்

சென்னை : நீலாம்பரி, ராஜமாதா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரம்யா கிருஷ்ணன் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற பல நடனங்கள் கற்று திரையுலகிற்குள் வந்தவர் தான் ரம்யா கிருஷ்ணன். 14 வயதில் தனது முதல் திரைப்படமான வெள்ளை மனசு படத்தில் நடித்தார்.

 actor ramya krishnan new photoshoots

அடுத்த தனது இரண்டாவது படமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். இதன் பின் பல படங்களில் நடித்த இவர் வரிசையாக கன்னடம், மலையாளம் மற்றும் இந்திய போன்ற திரையுலகில் கால்பதித்தார்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல சீரியல்களிலும் பல ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றியுள்ளார். இவர் தொகுத்த தங்க வேட்டை ஷோ இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை சின்னத்திரையில் பெற்று தந்தது.

 actor ramya krishnan new photoshoots

வெள்ளித்திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ஆண்டுகள் பல சென்றாலும் இன்று வரை பேசப்படுகிறது மற்றும் நீலாம்பரி போன்ற ஒரு கதாபாத்திரம் இன்று வரை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

Recommended Video

Queen web series Tamil | Reel & Real Characters | Gautam Vasedev Menon

இவர் பல கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக இவர் செய்த கதாபாத்திரம் வேறு எவராலும் செய்ய முடியாத அளவிற்கு இருந்தது, நடிப்பில் உச்சம் தொட்டு பல பாராட்டுக்களையும் பெயர்களையும் பெற்றுத்தந்தது ராஜாமாதா கதாபாத்திரம். ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டார்.

 actor ramya krishnan new photoshoots

தற்போது ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த அவர். அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வளைதலங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதனை பார்த்த அவரது ரசிகர்கள் வயதானாலும் உங்க ஸ்டைல் இன்னமும் உங்கள விட்டு போகல என்று பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X