வாய்ப்பு வேணும்னா படுக்கணும்.. சினிமாவே நாறிப்போய் இருக்கு .. கொந்தளித்த சனம் ஷெட்டி!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். அவரின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி பெரும் புயலை கிளம்பி உள்ளது. சிலர், அது உண்மையான வீடியோ என்றும், சிலர் ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்றும் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், நடிகை சனம் ஷெட்டி, சினிமா வாய்ப்பு வேணும்னா படுக்கணுமா என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆடிஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் லிங்க் உங்களிடம் இருந்தால் தயவு செய்து அதை யாருக்கும் ரீ ஷேர் செய்யாதீர்கள். அதை அப்படியே டெலிட் செய்து விடுங்கள். காம வெறி பிடித்து இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு காமம் வராது, பரிதாபம் தான் வரும். இது ஒரு வியாபாரம், படத்தில் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்க வேண்டும். இது சற்று வித்தியாசமானது. வீடியோ காலில் ஒரு பொறுக்கி என்ன வேண்டுமானாலும் கெட்ட வார்த்தை போட்டுக்கொள்ளுங்கள் தப்பே இல்லை. ஒரு பெரிய இயக்குனரின் மேனேஜர் என்று கூறிக்கொண்டு, ஒரு பெண்ணை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ, அனைத்தையும் செய்ய வைத்து இருக்கிறார்.

siragadikka aasai shruthi Narayanan sanam

கொந்தளித்த சனம்: அதற்கு, இந்த பெண் ஸ்ருதி நாராயணனும் சிரித்த முகத்தோடு அனைத்தையும் செய்து இருக்கிறார். சத்தியமாக இதை பார்க்கும் போது, மனதில் ஒரே கேள்விதான் எழுகிறது. ஏண்டா ஆடிஷன் என்ற பெயரில் என்ன வேண்டுமானால் கேட்பீங்களா? இப்படி ஒரு மானங்கெட்ட வழியில் படத்தை எடுத்து, எத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து நீங்கள் எல்லாம் நல்லாவா இருக்கப் போகிறீர்கள். இப்படி எடுத்த படத்தை குப்பையில் போடுங்கள். சினிமாவில் ஒரு பக்கம் நொப்போடிஷம் நடந்து கொண்டு இருக்கிறது. ஸ்டார் நடிகர்களின் வாரிசுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், வாய்ப்புகள் சக நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. அட்ஜஸ்ட்மென்ட் செய்யமாட்டோம் என்று சொல்வதால் என்னைப் போல பல நடிகைகளுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. இதனால் ஒரு நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் வரும் பெண்களின் கனவுகள் கொல்லப்படுகிறது.

siragadikka aasai shruthi Narayanan sanam

அசிங்கமான செயல்: சினிமாவை பொருத்தவரை தவறு செய்யாமல் இருப்பதே, ஒரு பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. அட்ஜஸ்ட்மேன்ட் கேட்பவர்கள் மீது எந்த அளவிற்கு தவறு இருக்கிறதோ, அதே அளவிற்கு, அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் மீதும் தவறு இருக்கிறது. ஆனால், ஸ்ருதி நாராயணனோ அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. அது ஏஐ வீடியோ என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த வீடியோ வெளியான பிறகு மீண்டும் ஒரு வீடியோ வெளியாக இருக்கிறது. அந்த வீடியோவிலும், அதேபோல் தான் அசிங்கமான செயல்கள் இருக்கிறது. உண்மையில் இந்த வீடியோ ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட வீடியோ என்றால், அதில் பாதிக்கப்பட்டது ஸ்ருதி நாராயணன் தான். ஆனால், இந்த செயலை செய்தவர்கள் யார் என்று அவர்கள் மீது ஸ்ருதி நாராயணன் புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு உண்மையான நியாயம் கிடைக்கும்.

இண்டஸ்ட்ரி நாறிப்போய் இருக்கு: எல்லா நடிகைகளின் சார்பாகவும் இந்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல வருகிறேன். உங்களுடைய இண்டஸ்ட்ரி நாறிப்போய் இருக்கிறது தயவுசெய்து அதை சுத்தம் செய்யுங்கள். எங்களைப் போன்ற சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வரும் நடிகைகளுக்கு ஒரு பாதுகாப்பை கொடுங்கள், சக நடிகையாக ஒரு பெண்ணாக எங்களுக்கு மரியாதை கொடுங்கள், எங்களுடைய திறமையை பார்த்து நியாயமாக வரவேண்டிய வாய்ப்பை எங்களுக்கு பெற்று கொடுங்கள். அதன் பிறகு எந்த கல்லூரி பெண் யாருடன் படுத்தால், எந்த நடிகை என்ன சரக்கு அடித்தார் என்பது குறித்து விவாதத்தை நடத்துங்கள் என்று கடுமையாக பேசி உள்ளார்.

நான் அவன் இல்லை: ஆனால், ஸ்ருதி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு ஏஐ குறித்த வீடியோவை பகிர்ந்து, அதுப்போலத்தான் தனது வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை விளக்கி இருந்தார். மேலும் இன்னொரு ஸ்டோரியில், ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கு உணர்வுகள் உண்டு. அனைத்தையுமே காட்டு தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றோரும் பெண்கள்தான். அவர்களுக்கும் என்னைப் போல்தான் உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பாருங்கள் என தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

siragadikka aasai shruthi Narayanan sanam

பணத்திற்காக இப்படியா: முன்னதாக இதுகுறித்து பேசி இருந்த பயில்வான் ரங்கநாதன், நடிகை தான் ஸ்ருதி நாராயணன், போதையில் இப்படி செய்துவிட்டாரா அல்லது பணத்திற்காக ஆசைப்பட்ட இவ்வாறு ஆபாச வீடியோ வெளியிட்டாரா என தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோ ஒரிஜினல் வீடியோ தான் AI மூலம் உருவான வீடியோ இல்லை. அந்த, வீடியோவில் ஸ்ருதி நாராயணன், இதில் எனக்கு அனுபவம் இல்லை என்று பேசுவது தெளிவாக கேட்கிறது. எந்த பெண்ணும் செய்யத் துணியாத ஒரு வேலையை ஸ்ருதி நாராயணன் செய்திருக்கிறார். ஒரு பெண் தன் உடலை தாலி கட்டிய கணவன் மட்டும் தான் பார்க்க வேண்டும். ஆனால், ஸ்ருதி நாராயணன் உடலை காட்டி விருந்து வைத்துஇருக்கிறார். இந்த அளவுக்கு ஒரு பெண் இருப்பாளா, மானம், சூடு, சொரணை எல்லாத்தையும் இழந்த பிறகு பணத்தையும் புகழையும் வைத்து என்ன செய்வீர்கள் என கடுமையாக பேசி இருந்தார்.

யார் இந்த ஸ்ருதி நாராயணன்: 24 வயதே ஆன ஸ்ருதி நாராயணன், 12ம் வகுப்பு படிக்கும்போது திரைத்துறைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே, யூ டியூப் சேனல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு அதில் நடித்துள்ளார். அதன் பின், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பயிற்சி பெற்றார். தனது கல்லூரி படிப்பை முடித்த இவர், 2022ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு தான் இவருக்கு விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், மாரி சீரியலில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X