'அந்த ஹீரோயினுடன் டேட்டிங்கில் இருந்தது உண்மைதான், ஆனால்...' காதலை ஒப்புக்கொண்ட இளம் ஹீரோ!

By

சென்னை: அந்த ஹீரோயினுடன் முன்பு டேட்டிங் சென்றது உண்மைதான், ஆனால் இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளார், நடிகர் ஒருவர்.

ஜெய், நஸ்ரியா நடித்த படம், 'திருமணம் எனும் நிக்காஹ்'. இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தவர் ஹெபா படேல்.

இதற்கு பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர், தெலுங்கில் ராகுல் ரவீந்திரன் ஜோடியாக அல எலா என்ற படத்தில் நடித்தார்.

தடம் ரீமேக்

தடம் ரீமேக்

இந்தப் படம் கவனிக்கப்பட்டது. பின்னர் ஏதோ ராகம், அதோ ராகம், ஆனந்த் இயக்கிய எக்கடிக்கு போதாவு சின்னவாடு, ஏஞ்சல், 24 கிஸ்சஸ், பீஸ்மா உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது தமிழில் வெளியான தடம் படத்தின் தெலுங்கு ரீமேக், ஒரே புஜ்ஜிகா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

கிசுகிசு

கிசுகிசு

இவரும் தெலுங்கு ஹீரோ ஒருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவின. இதுபற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. சினிமாவில் காதலிக்கும் ஹீரோயின்கள் நிஜத்திலும் காதலிப்பது சகஜம்தான். இந்நிலையில், நடிகை ஹெபா காதலிக்கும் ஹீரோ, ராஜ் தருண் என்பது தெரியவந்தது. இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் தொடர்ந்து கிளம்பின.

புரமோஷன் நிகழ்ச்சி

புரமோஷன் நிகழ்ச்சி

இந்நிலையில், நடிகர் ராஜ் தருண் இதை மறுத்திருந்தார். இவரும் ஹெபா படேலும் 'ஒரே புஜ்ஜிகா' என்ற காமெடி படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது ஹெபா பட்டேலுடனான காதல் பற்றி கேட்டபோது, அவர் மீண்டும் மறுத்தார்.

டேட்டிங் சென்றது

டேட்டிங் சென்றது

அவர் கூறும்போது, என்னை பற்றியும் என் சொந்த வாழ்க்கை பற்றியும் நிறைய கிசு கிசுக்கள் வந்துவிட்டது. ஹெபாவுடன் முன்பு சில வருடம் டேட்டிங்கில் இருந்தது உண்மைதான். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. நான் தனியாகத்தான் இருக்கிறேன். சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இன்னும் மூன்று வருடம் கழித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X