சிம்ரன் பாருங்க சார்.. எவ்ளோ அழகா சாப்பிடுறாங்க பாருங்க சார்.. க்யூட் டிக்டாக்!

சென்னை : டாக்டாக்கில் சிம்ரன் பகிர்ந்த வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அது அவர் சாப்பிடும் வீடியோதான்.

சிம்ரன் என்ற உடன் நினைவுக்கு வருவது அவரின் இடுப்பும், இடுப்பு டான்ஸ்சும் தான் அந்த நடனத்தை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஹீரோயின் யார் என்றால் அவர் தான் சிம்ரன்.

90ஸ் வரலாற்றில் சிம்ரனுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90ஸ் மட்டுமல்ல சீமராஜா படத்தில் நடித்தன் மூலம் யார் இவர் என்று இன்றைய தலைமுறையினர் கேட்கும் அளவுக்கு இவரது நடிப்பு எதார்த்தமாகவும் அழகாகவும் இருந்தது.

அறிமுகம்

அறிமுகம்

சிம்ரனின் உண்மையான பெயர் ரிஷிபாமா. இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலமே இவர் இந்தி திரைத்துறையில் கால்பதித்தார். இவர் நடித்த முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்வியைத் தழுவியது. அடுத்தடுத்த படங்களும் சரியாக பெயர் சொல்லவில்லை. இதையடுத்து, ஒருவருட போராட்டத்திற்கு பிறகு தேரே மேரே சப்னே என்ற இந்தி படத்தில் நடித்தார் இந்த படம் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

 தமிழில் முதல் படம்

தமிழில் முதல் படம்

மலையாளத்தில் மம்முட்டியுன் இவர் நடித்த இந்திரபிரஸ்தம் என்ற படம் இவருக்கு நல்ல பெயரையும் வெற்றியையும் தேடித் தந்தது. இதனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தன. தமிழிலில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் கால்பதித்தார் சிம்ரன். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பெருமை இவரை சேரும்.

 வெற்றி நாயகி

வெற்றி நாயகி

நேருக்குநேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார் சிம்மரன். 1999ம் ஆண்டு வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார். இவர் நடித்த துக்மணி கதாபாத்திரம் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத் தந்து. இதையடுத்து, பிரியமானவளே, வாலி, கன்னத்தில் முத்தமிட்டாள் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

 இடுப்பு டான்ஸ்

இடுப்பு டான்ஸ்

சரியான உயரம், மெல்லிடை, அழகான தோற்றம், கச்சிதமான அழகு என அனைத்தையும் தாண்டி இவரின் நடனம் பலரையும் கவர்ந்தது. இவர் ஆடும் அந்த இடுப்பு டான்ஸ்க்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று கூட சொல்லலாம். ஆள்தோட்ட பூபதி நானடா என்ற பாடலுக்கும் விஜயுடனான சிம்ரனின் இடுப்பு டான்ஸ் ரசிகர்களை இன்றளவும் ரசிக்க வைத்துள்ளது. அந்த பாடல் பாடல் ஹிட் அடிக்க இவரின் டான்ஸ் தான் ஹைலைட் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர் சிம்ரன் தானாம்.

 டிக்டாக் வீடியோ

டிக்டாக் வீடியோ

லாக்டவுன் என்பதால் பல பிரபலங்கள் தாங்கள் செய்யும் டிக்டாக், போட்டோக்கள், வீடியோக்கள் என பலவற்றை பதிவிட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தற்போது சிம்ரன் டிக்டாக் வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் க்யூட், க்யூட் ரியாக்சனுடன் சாப்பிடுவதை அழகாக பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா, இவ்வளவு ஸ்டைலா என்று ரசித்து பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் சிம்ரனின் மகன் ஓடோ இவருக்கு டல்கோனா காஃபி போட்டுக்கொடுத்ததை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறித்தத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X