Actress Jyotika: ஒன்றா ரெண்டா ஆசைகள்.. மீண்டும் காக்க காக்க மோடில் ஜோதிகா!

சென்னை: நடிகை ஜோதிகா விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளவர். தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கிய ஜோதிகா தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிப்பு, தயாரிப்பு என தன்னை பிஸியாக வைத்து வருகிறார் ஜோதிகா. தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் சமீபத்தில் மாதவன், அஜய் தேவ்கனுடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்த ஷைத்தான் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

Suriya Jyotika Instagram tamil cinema

நடிகை ஜோதிகா: நடிகை ஜோதிகா விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த். கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி பட நாயகியாக வலம்வந்தவர். தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் குடும்பத்தை கவனிக்கும் வகையில் சில ஆண்டுகள் ஜோதிகா நடிக்காமல் இருந்தார். தொடர்ந்து தங்களது சொந்த தயாரிப்பில் 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

Suriya Jyotika Instagram tamil cinema

ஷைத்தான் படம்: தற்போது தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் மாதவன், அஜய் தேவ்கனுடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்த ஷைத்தான் படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது. ஹாரர் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஜோதிகாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை இந்தப் படம் பாலிவுட்டில் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளராகவும் தன்னுடைய கணவர் சூர்யாவுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார் ஜோதிகா. சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கை தற்போது தங்களது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

Suriya Jyotika Instagram tamil cinema

அம்பானி திருமணத்தில் சூர்யா -ஜோதிகா: சர்ஃபிரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ள ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்செண்ட் திருமண நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கலந்து கொண்டனர். பட்டு வேட்டி சட்டை மற்றும் சேலையுடன் பாரம்பரிய உடையில் இந்த ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்றது, இவர்களின் உடையலங்காரம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. தன்னுடைய புடவைக்கு மேட்சிங் ஆன அணிகலன்களை ஜோதிகா அணிந்திருந்தது அனைவரின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது.

Suriya Jyotika Instagram tamil cinema

ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்: இந்நிலையில் இந்த காஸ்ட்யூமில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து போட்டோசூட் செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்களையும் பெற்று வருகிறது. 4 மணிநேரத்திலேயே ஒரு மில்லியன் லைக்ஸ்களை இந்த புகைப்படங்கள் பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களுக்கான கேப்ஷனில், ஒன்றா இரண்டா ஆசைகள் என்ற காக்க காக்க பட பாடலை இணைத்துள்ளார் ஜோதிகா.

Suriya Jyotika Instagram tamil cinema

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X