கருப்பு படத்தை வெற்றிப்படமாக்கிய ‘என் சாமிகளா‘.. சூர்யா நெகிழ்ச்சி!
சென்னை: சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சூர்யா மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். கண்ணுகளா.. செல்லங்களா.. சாமிகளா, என் சாமிகளா... முதலில் இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படம் முதலில் திட்டமிட்டபடி 14ஆம் தேதி வெளியாக முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது. அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் இக்கட்டான மனநிலையில் இருந்தோம் ஆனால் ரசிகர்கள், அனைத்து திசைகளிலிருந்தும் அனுப்பிய ட்வீட்கள், வாய்ஸ் மெசேஜ்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவை மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

சூர்யா வீடியோ:"அன்றைக்கே எல்லாத்தையும் புறட்டு போட்டு விடலாம் என்று தோன்றியது. நீங்கள் தான் எல்லாத்தையும் மாற்றிட்டீங்க. அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி "கருப்பு" திரைப்படம் வெளியான பிறகு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை பார்த்து தன்னை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ரசிகர்கள் அளித்த மரியாதை மற்றும் வரவேற்பு, படக்குழுவிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. எடிட்டர், ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நடிகை த்ரிஷா. மற்றும் முழு படக்குழுவினரின் சார்பாகவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
எல்லாருக்கும் நன்றி: மேலும் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இந்த படத்தை நம்பிக்கையுடன் தயாரித்து வெளியிட்ட Dream Warrior Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான பிரகாஷ் மற்றும் பிரபுவிற்கும் நன்றி. இறுதியாக "இந்த அன்பு எனக்கு மிகவும் முக்கியமானது. கருப்பு படத்தை இவ்வளவு ஸ்பெஷலாக மாற்றிய அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி என்று சூர்யா அந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார். இந்த நெகிழ்ச்சியான நன்றி வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அவர் ரசிகர்களை "என் சாமிகளா" என்று அழைத்து பேசிய விதம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications